Breaking
Mon. Dec 23rd, 2024

துருக்கி நாட்டு கடற்கரையில் இறந்து கிடந்த அகதி சிறுவன் அய்லானுக்கு பிரபல நடிகை உட்பட சமூக ஆர்வலர்கள் அய்லான் இறந்து கிடந்தது போலவே கடற்கரையில் படுத்து அஞ்சலி செலுத்தியுள்ளமை உருக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

அய்லானுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக காசாவில் உள்ள கடற்கரை ஒன்றில் 30 நபர்கள் கொண்ட சமூக நல அமைப்பினர் கடந்த திங்கட்கிழமை கூடியுள்ளனர்.

அய்லான் அணிந்திருந்த சிவப்பு மற்றும் நீல நிற ஆடைகளுடன் சிறுவன் இறந்து கிடந்த தோற்றத்தை போலவே அனைவரும் கடற்கரை மணலில் சுமார் 20 நிமிடங்கள் படுத்திருந்து அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

Related Post