Breaking
Tue. Dec 24th, 2024

சிரியாவின் கேந்திர நகரமான அலப்போ பிராந்தியத்தில் இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிக்கி உயிருக்காகப் போராடிவரும் மக்களின் துயரநிலை கவலையளிப்பதாகவும் இவர்களுக்கு விமோசனம் கிடைக்க நாம் பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டுமெனவும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மத்திய கிழக்கில் முஸ்லிம் நாடுகளில் பிரச்சினைகளை உருவாக்கி அதன் மூலம் குளிர்காய நினைக்கும் அந்நியசக்திகளின் அநாவசியத்தலையீடுகள் காரணமாக இவ்வாறான மிலேச்சத்தனமான படு கொலைகளும் இரத்தக்களரிகளும் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின்றன. இவ்வாறான திட்டமிட்ட ஊடுருவலை சமாதானத்தை விரும்பும் நாடுகளும், உலக அமைதிக்காக உருவாக்கப்பட்டுள்ள தாபனங்களும் வெளிப்படையாகக் கண்டிக்க வேண்டும். இதன் மூலமே இனிவரும் காலங்களிலும் மத்திய கிழக்கு நாடுகளில் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும். முஸ்லிம் நாடுகளில் வேண்டுமென்றே, திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்கி அந்நாடுகளில் வாழும் முஸ்லிம்களைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் முயற்சிகள் வேகமாக அரங்கேறிவருகின்றன. இவை குறித்து முஸ்லிம் உம்மத்துக்கள் கவனமாக இருக்க வேண்டுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுமார் 30 வருடங்களுக்கு முன்னர் அமைதியாக இருந்த மத்திய கிழக்கில் மீண்டும் பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளமை முஸ்லிம்களை கவலைகொள்ளச் செய்துள்ளதாகவும் அமைச்சர் ரிஷாத் தெரிவித்துள்ளார்.

By

Related Post