ஹங்கேரி பொலிஸார் குடியேறிகள் மீது கண் ணீர்ப்புகை மற்றும் தண்ணீர் பீச்சியடித்தது குறித்து ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீ மூன் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார்.
தஞ்சக்கோரிக்கையாளர்கள் மீது இவ்வாறு நடந்து கொள்வது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
ஹங்கேரி-செர்பிய எல்லையில் இருக்கும் ஹொர்கோஸ்-ரொஸ்கே கடவையில் நேற்று முன்தினம் இந்த மோதல் ஏற்பட்டது. இதன் போது ஆத்திரமடைந்த நுற்றுக்கணக்கானவர்கள் ஹங்கேரி எல்லையில் அமைக்கப்பட்டிருக்கும் கம்பி வேலியை அகற்ற முயன்றுள் ளனர்.
இந்த பதற்றத்தில் இரு சிறுவர்கள் காயமடைந்ததாக ஹங்கேரி குறிப்பிட்டுள்ளது. ஹங்கேரியை ஒட்டி இருக்கும் செர்பிய நிலப்பிகுதியிலேயே குடியேறிகள் நிர்க்கதியாக வெட்ட வெளியில் தங்கியுள் ளனர். அங்கு பதற்றத்தை தணிக்க பொலிஸார் அனுப்பப்படும் என்று செர்பிய உள்துறை அமைச்சர் நெபொஜ் சா ஸ்டபனோவிக் குறிப் பிட்டுள்ளார்.
“நாம் வெளியேறிச் செல்வோம். நாம் வெளியேறி nஜர்மனிக்குச் செல்வோம்” என்று அங்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் ஒலிபெருக்கி கொண்டு கூச்சல் எழுப்பினார். அதே போன்று ‘கதவைத் திற’ என்று ஒருவர் ஆங் கிலத்தில் கூச்சலிட கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் அதனை எதிரொலித்தனர்.
குடியேறிகளின் வருகை அதிகரித்ததை அடு த்து ஹங்கேரி கடந்த செவ்வாயன்று தனது செர்பிய நாட்டு எல்லையை மூடியது. இந் நிலையில் குடியேறிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அடைய மாற்று வழிகளை பயன் படுத்த ஆரம்பித்துள்ளனர். இவ்வாறு 5000க் கும் அதிகமான குடியேறிகள் செர்பியாவில் இரு ந்து குரோஷியாவை சென்றடைந்துள்ளனர்.
செர்பியாவின் ஹங்கேரி எல்லையில் இருந்து குரோஷியா நோக்கி பயணிக்கும் பக்தாதை சேர்ந்த 58 வயது அஹமது, ஹங்கேரி எல் லையில் நிலைமை மோசமடைந்திருப்பதாக விபரித்தார்.
“குரோஷியா ஊடாக பயணிக்க முடியும் என்ற செய்தி கிடைத்த விரைவிலேயே தொடர்ந்து காத்திருக்காமல் நாம் பயண த்தை ஆரம்பித்தோம். சுவீடனில் இருக்கும் குடும்பத்தினருடன் இணைய நான் எதிர்பார்க் கிறேன். குரோஷியா எம்மை நல்லபடி நடத்தும் என்று நாம் எதிர்பார்க்கிறோம்” என்று அவர் ராய்ட்டருக்கு குறிப்பிட்டார்.
ஐரோப்பாவின் கொள்கைகளுக்கு முரணாக ஹங்கேரி கொடூரமாக நடந்துகொள்வதாக குற்றம்சாட்டியிருக்கும் செர்பிய பிரதமர் அல க்சாண்டர் வுசிக், ஐரோப்பிய ஒன்றியம் இதுபற்றி கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியு றுத்தியுள்ளார்.
குடியேறிகள் ஹங்கேரி எல்லையில் இருந்து தவிர்க்க அங்கு மேலதிக பொலிஸாரை அனுப்பி இருப்பதாக செர்பியா அறிவித்துள்ளது.
மறுபுறம் ஹங்கேரி தனது எல்லையில் துப்பாக்ககளுடனான இராணுவ வாகனங்களை குவித்து வைத்துள்ளது. மறுபுறம் கடந்த புதனன்று மேலும் 7,266 பேர் ஜெர்மனியை சென்றடை ந்துள்ளனர்.
இது முந்தைய தினத்தில் நாட்டு க்குள் வந்தடைந்த குடியேறிகளின் எண்ணிக் கையை விடவும் இரட்டிப்பாகும் என்று nஜர்மனி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ஆஸ்திரிய எல்லையை கடந்தே பெரும்பாலான குடி யேறிகள் ஜெர்மனியை அடைகின்றனர்.
பெரும்பாலான குடியேறிகளின் கடைசி இலக்கு ஜெர்மனியாக உள்ளது.
எனினும் குடியேறிகள் விவகாரத்தை எவ்வாறு கையாள்வது என்பதில் ஐரோப்பிய ஒன் றிய நாடுகளுக்கு இடையில் பிளவு நீடித்து வருகிறது.