Breaking
Mon. Dec 23rd, 2024
சிரியா உள்நாட்டு யுத்தத்தை தடுப்பது தொடர்பாக அமெரிக்கா எடுத்த முயற்சிகளில் தோல்வியை சந்தித்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதியான ஒபாமா வெளிப்படையாக பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிரியா அரசாங்கத்திற்கு எதிராக அந்நாட்டு கிளர்ச்சி படைகள் கடந்த 4 ஆண்டுகளாக யுத்தத்தில் ஈடுப்பட்டு வருகிறது. தற்போது, ஐ.எஸ் அமைப்பும் தாக்குதல் நடத்தி வருவதால் உள்நாட்டு யுத்தம் வலுவடைந்துள்ளது. இந்த யுத்தத்தை தடுப்பதற்காகவும், ஐ.எஸ் வாதிகளை முறியடிப்பதற்காகவும் அமெரிக்க தலைமையிலான கூட்டுப்படைகள் தொடர்ந்து போராடி வருகின்றன.
இந்நிலையில், நேற்று அமெரிக்க செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஒபாமா, ஒரு பரபரப்பான தகவலை வெளியிட்டுள்ளார்.
சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு யுத்த பிரச்சனையை தீர்ப்பது என்பது ஒட்டுமொத்த நாடுகளுக்கும் மிக சிரமமான விவகாரமாக நீடித்து வருகிறது. இந்த பிரச்சனையை தீர்க்க இதுவரை அமெரிக்க எடுத்த அனைத்து நடவடிக்கைகளும் தோல்வியில் முடிந்துள்ளது. இந்த கருத்தை முதன் முதலாக ஜனாதிபதி என்ற முறையில் நான் கூறுகிறேன்.
சிரியா வீரர்களுக்கு ராணுவ பயிற்சி அளிப்பது ஐ.எஸ் களுக்கு எதிராக போரிட தயார் செய்வது என்பது பஷார் அசாத் அந்நாட்டு ஜனாதிபதியாக நீடிக்கும் வரை இயலாத காரியம் என ஒபாமா கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், கடந்த 10 நாட்களாக சிரியாவில் உள்ள ஐ.எஸ் வாதிகளுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தி வருவது குறித்து ஒபாமாவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
அப்போது பேசிய ஒபாமா, சிரியாவில் ஐ.எஸ்வாதிகளுக்கு எதிராக போரிடுவதாக கூறிக்கொண்டு தாக்குதலை தொடக்கியிருப்பதால் மட்டும் ரஷ்ய ஜனாதிபதி புடின் உலகளவில் சக்தி வாய்ந்த தலைவராக மாறிவிட முடியாது என ஒபாமா அதிரடி கருத்தை வெளியிட்டுள்ளார்.

By

Related Post