Breaking
Sun. Dec 29th, 2024

ஞாயிற்றுக்கிழமை சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸில் சர்வதேச விமான நிலையத்துக்கு அண்மையாக ஓர் தாக்குதலையும் லெபனான் எல்லைக்கு அருகே டிமாஸ் நகருக்கு அண்மையில் ஓர் தாக்குதலும் என இரு விமானத் தாக்குதல்களை இஸ்ரேல் நிகழ்த்தியிருப்பதாக சிரியா குற்றம் சாட்டியுள்ளது.

4 வருடங்களுக்கு முன்னர் சிரிய அதிபர் பஷார் அல் அசாத்துக்கு எதிராக அங்கு உள்நாட்டுப் போர் ஆரம்பித்ததில் இருந்தே சிரியா மீது இஸ்ரேல் அத்துமீறி சில தடவைகள் விமானத் தாக்குதல் நடத்தியிருந்ததாகத் தகவல்கள் வெளியாகி இருந்தன.

இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை நிகழ்ந்த தாக்குதலின் போது டிமாஸ் நகருக்கு அருகே இராணுவப் பகுதிக்கு வெளியே 10 வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக சிரியாவில் இயங்கும் பிரிட்டனைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகள் அமைப்பு தெரிவித்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேலின் இந்த விமானத் தாக்குதல்களை சிரியாவும் ஈரானும் கண்டித்துள்ளன. இது குறித்து சிரிய மற்றும் ஈரானிய வெளியுறவுத் துறை அமைச்சர்கள், இந்த விமானத் தாக்குதல்களை சிரிய அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்டு வரும் போராட்டத்துக்கு இணையானது என்றும் இஸ்ரேலும் அக்குழுக்களுக்குள்ளேயே அடங்குவதையே இது குறிக்கின்றது எனவும் விசனம் தெரிவித்துள்ளனர்.

மேலும் திங்கட்கிழமை டமஸ்கஸ்ஸில் இஸ்ரேல் மேற்கொண்ட இரு விமானத் தாக்குதல்களுக்கும் விளக்கம் அளிக்குமாறு ரஷ்யாவும் அழுத்தம் தெரிவித்துள்ளது.

Related Post