Breaking
Sun. Dec 22nd, 2024

அஸ்ரப் ஏ சமத்

இலங்கை பத்திரிகை ஆசிரியா் சங்கமும், இலங்கை பத்திரிகை ஸ்தாபணமும் 16வது முறையாக சிறந்த ஊடகவியலாளா்களுக்கு வருடா வருடம் தெரிபு செய்து விருது வழங்கும் நிகழ்வு நேற்று கல்கிசை பீச் ஹோடடலில் நடைபெற்றது.

இலங்கையில் நாளாளாந்த வாரந்த வரும் 30 பத்திரிகைகளில் 3 மொழிகளிலும் 15 பிரிவுகளிலும் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன இவற்றில் வாழ்நாள் சாதானையாளா்கள் விருது, லத்தீப் பாருக், முன்னாள் தினகரன் ஆசிரியா் எஸ். தில்லைநாதன் வழங்கப்பட்டது.

மற்றும் சிறந்த வா்த்தக செய்தி ஊடகவியலாளா். விளையாட்டு, காட்டுனிஸ்ட், சிறந்த பந்தி எழுத்து, மேர்வின் சில்வா விருது., பேராசிரியா் கைலாசபதி விருது, சுப்ரமணிய செட்டியாா் விருது, உபாலி விஜயவா்தன விருது, சூழலியல் விருது, புலநாய்வு ஊடகவியல் விருது, போன்ற பிரிவுகளில் ஆயிரக்கணக்கான வின்னணப்பங்களில் நடுவா்கள் உரிய ஆக்கத்துக்கு புள்ளி வழங்கி தெரிவு செய்து இவ் விருது வழங்கப்பட்டு வருகின்றது.

இம்முறை வீரகேசரி, தினக்குரல், தமிழ் மிரா் ஆகிய பத்திரிகைகளில் உள்ள தமிழ் ஊடகவியலாளா்கள் சிலா் விருதுகளை பெற்றுக் கொண்டனா்.

Related Post