Breaking
Sat. Jan 11th, 2025

அடுத்த வருடம் நடை பெறவுள்ள ஜனாதிபதி தேர் தலில் போட்டியிட உள்ள பொது எதிரணியின் கூட்டமைப்பா னது இலங்கை அரசியலில் எதிரியும் இல்லை நண்பனும் இல்லை என்ற நிலையை தோற்று வித்துள்ளது.

மைத்திரிபால சிறிசேன வுக்கு பொருத்தமான எதிர்த் தரப்பு வேட்பாளராக இருக்கும் தகுதி இருக்கிறதா என்பதில் சிறு சந்தேகமிருக்கலாம். ஆனால், அவரது தகுதியை மேலும் உயர்த் தும் வகையில் பல பிரமுகர் களும் அரசியல்கட்சிகளும் அவ ரைச் சார்ந்து நிற்கிறார்கள். இந்தப் பட்டியலில் முதன்மை வகிப்பவராக சிறிசேனவின் குரு போன்றவரும், முன்னாள் ஜனாதிபதியுமான சந்திரிகா பண்டாரநாயக்க குமாரண துங்க இருக்கின்றார். சிறி சேனவை முன்னிறுத்தி பணி யாற்றுவதற்கான முன்னெடுப் புக்களை எல்லாம் அவரே செய் திருந்தார்.

அரசுத் தரப்பிலிருந்து வில கிய சிறிலங்கா சுதந்திரக் கட்சி யினரின் அவசரக் கூட்டமொன்று புதிய நகரசபை மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தின் அழைப்பாளர் திருமதி சந்திரிகா குமாரணதுங்க மற்றும் சிறி சேன முதலியவர்களுடன் மீன் பிடி அமைச்சர் ராஜித சேனா ரத்ன, கல்விச் சேவைகள் அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, புத்தசாசன மற்றும் சமய விவகாரங்கள் பிரதி அமைச்சர் எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன முதலியவர்களுடன் நாடாளு மன்ற உறுப்பினர்கள் ரஜீவ விஜேசிங்க, அர்ஜுன ரண துங்க ஆகியவர்களும் அமர்ந்தி ருந்தனர். அமைச்சர்களும் பிரதி அமைச்சரும் பதவிக ளைத் துறக்காமலே கூட்டத் துக்கு வந்திருந்தனர். ஆனால், அந்தப் பதவிகள் யாவும் ராஜபக்­வினால் பின்னர் நீக்கப் பட்டுவிட்டன.

பிறகு நுவரெலிய மாவட்ட நாடாளுமன்ற உறுப் பினர் பெருமாள் ராஜதுரையும் கூட்டத்தில் இணைந்துகொண் டார். கம்பஹா மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு உறுப்பினர் வசந்த சேனநா யக்க ஐ.தே.கவில் இணைந்து கொண்டார். மேலும் பலர் அரசி லிருந்து தங்களுடன் இணைந்து கொள்ள இருக்கிறார்கள் என்று கூட்டமைப்பாளர்கள் கூறிக் கொண்டார்கள். 32 பேர் அர சிலிருந்து வரவிருக்கிறார்கள் என்று குமாரணதுங்க கூறி னார். ஐ.தே.கட்சியின் லக்ஷ் மன் கிரியயல்ல 60 பேர் கட்சி தாவ இருக்கிறார்கள் என்றார்.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியி லிருந்து ஒரு பகுதியினர் ஐ.தே. கவுடன் கைகோர்த்துக்கொண் டுள்ள நிலையில் ஏற்கனவே ஜாதிக யஹல உறுமய இணைந்து கொண்டுள்ளது. ஐ.தே.கவின் உயர்நிலை பிரமுகர்கள் சிலர், ஜே.வி.பியையும் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பையும் கூடத் தங்களுடன் இணைத்துக் கொள்ள பேச்சு நடத்தி வருகின் றனர். முஸ்லிம் காங்கிரஸை யும் இணைத்துக்கொள்ள முயற்சி நடைபெறுகின்றது. இவ் வாறு ஒரு பொது எதிர்க்கட்சி அமைப்பு ஏற்படுமானால் நிச்ச யம் அது ராஜபக்­வினருக்கு பெரும் அழுத்தம் கொடுப்பதா கவே இருக்கும்.

ஜே.வி.பி. இது குறித்துக் கருத் துக்கூற மறுத்துவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலை வர் இராஜவரோதயம் சம்பந்தர் கூறுகையில்;

வேட்பாளர் யார்? என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. சிறி சேனவின் பேச்சை தொலைக் காட்சியில் பார்த்தேன். அதில் சில முற்போக்கான அம்சங்கள் காணப்பட்டன. நாங்கள் ஒரு தீர்மானம் எடுப்பதற்காகக் கூட வேண்டியிருக்கிறது. எமது மக் களிடமும் நாங்கள் கருத்துக் கேட்க வேண்டியிருக்கும். நியம னத் திகதி டிசெம்பரில் என்ப தால் இன்னமும் காலமிருக் கிறது என்றார். முஸ்லிம் காங் கிரஸ் உயர்மட்டக்குழு கூடி தீர்மானம் எடுக்கும் என்று அதன் தலைவர் கூறினார்.
அரசின் எதிர் நடவடிக்கை
இதேசமயம் அரசு தரப்பில் எதிர் நடவடிக்கைகளும் எடுக்க ப்பட்டு வருகின்றன.

சந்தேகத் துக்குரிய அமைச்சர்களும் உறுப்பினர்களும் கவனமாக கண்காணிக்கப்பட்டு வரு கிறார்கள். ஏனையவர்களுடன் சந்திப்புக்கள் இடம்பெற்று வரு கின்றன. நாடாளுமன்ற உறுப்பி னர்களின் குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்று அரசால் வாக்குறுதி வழங்கப்பட்டு வரு கிறது. ஜனாதிபதி மற்றும் அவர் குடும்பம் தொடர்பில் நச்சுத் தனமான கருத்துக்களை வெளி யிட்டவரான அமைச்சர் ஒரு வரும் தீவிர கண்காணிப்புக் குள்ளாகியிருப்பது தெரிகிறது. சிறிசேன விலகுவதற்கு முன்னர் இரண்டு தடவைகள் அவருடன் ஜனாதிபதி பேச்சுக்களை நடத்தி பிரிந்து போகாமல் இருக்கச் செய்ய முயற்சிசெய்துள்ளார் என்று தெரிகின்றது.

18 ஆவது திருத்தம் மிகப்பெரிய தவறு
போர் முடிவுற்ற பின்னர் அரசின் நிலை எதிர்பார்க்காத விதத்தில் வேறு திசையில் போகத் தொடங்கியது. அரசமைப்பில் 18 ஆவது திருத்தம் இணைத் துக்கொள்ளப்பட்டமை மிகப் பெரிய தவறாகும். அது எமது சுயாதீனத்தை இல்லாமல் செய்து விட்டது. எமது மக்களின் ஜன நாயக உரிமைகள், நாடாளு மன்றத்தின் அதிகாரங்கள் அனைத் தையும் பறித்துவிட்டது. 1978 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட நிறைவேற்று ஜனாதிபதி முறையை மேலும் வலுவாக்கிவிட்டது.

கடந்த சில ஆண்டுகளாக நாடு சர்வாதிகாரத்தை நோக்கி நகரத் தொடங்கியது. ஊழல், மோசடி கள், அநீதிகள் பெரும் எடுப்பில் அதிகரித்துவிட்டன. நீதித்துறை யின் உயர்நிலை தாழ்ந்து விட் டது. பொலிஸ் நிர்வாகம் கீழ் நிலைக்குச் சென்றுவிட்டது. தவறு செய்கிறவர்களை அவர் களால் ஒன்றும் செய்யமுடிய வில்லை. இந்த முறையில் சர்வாதிகாரம் மறைமுகமாக தலையயடுக்க ஆரம்பித்தது. நிர்வாகத்தையும் பொருளாதாரத் தையும் ஒரு குடும்பம் மேற்கொள் ளத் தொடங்கியது. இதன் கார ணமாக என்னுடன் இன்னும் சேர்ந்துகொள்ள இருக்கும் பல ரும் இதற்கு ஒரு தீர்வுகாண வேண்டும் என்று ஆலோசித் தோம். ஏனைய கட்சிகளுடனும் கலந்தாலோசித்து ஒரு முடி வுக்கு வந்தோம் என்று கூறி னார். அவர் மேலும் கூறுகை யில்;

கடந்த நான்கு ஆண்டு காலம் சுகாதார அமைச்சராக இருந்த வகையில் மிகக் கவ லைக்குரிய அனுபவங்களைப் பெற்றேன். சிகரெட் பாக்கெட்டுக் களில் படத்துடனான எச்சரிக்கை பிரசுரிப்பது தடங்கலுக்குள்ளா னது. தேசிய மருத்துவக் கொள்கை தடைப்பட்டுவிட்டது.இதற்குக் காரணம் யார்? ஹல்ப்ஸ்டோப் புக்குச் (அளுத்கடை) சென்று நீதிமன்ற வாங்கில் அமர்ந்திருந் தேன். ஆனால், செயற்படுத்த முடியாமல் போய்விட்டது என்றார் -அவர். மேலும் ஊடக சுதந் திரம் பற்றி குறிப்பிடுகையில், ஊடகங்கள் மீது செய்திகளை திரித்துக் கூறும்படியும் உண்மை களை மறைக்கும்படியும் அழுத் தம் கொடுக்கப்படுவதை அறி வீர்கள். புதிய அரசு அமைந் தால் உண்மையான ஊடக சுதந் திரம் இருக்கும். ஊடக வியலா ளர்கள் சுதந்திரமாகப் பேசவும் எழுதவும் கூடியதாக இருக்கும் என்றார். இப்போது நடைமுறை யில் இருக்கும் ஊழல் நிறைந்த தேர்தல் முறை ஒழிக்கப்படும். 18 ஆவது திருத்தம் ஒழிக்கப் பட்டு 17 ஆவது திருத்தம் மீள வும் செயற்படுத்தப்படும்-என்றார்.

அமைச்சர் ராஜித சேனா ரத்ன பேசியபோது சர்வதேச மட்டத்தில் எமது நாட்டின் தோற் றம் நாசமாக்கப்பட்டுள்ளது. சர்வதேசத்துக்கு எதிராகக்கத்து வதும், பெரிய வசனங்களைப் பேசுவதும் தேசப்பற்று ஆகிவிட் டது. அது வீரத்தனமும் ஆகாது. எல்லாமே மிகவிரைவில் ஓர் உச்சநிலைக்கு வருவதைக் காணலாம் என்றார். அவர் பேச்சை முடிக்கும் தறுவாயில் தமது அதிகாரபூர்வ வாகனத்தை ஒப்படைக்கும்படி தகவல் வந்தி ருக்கிறது என்பதைத் தெரிவித் தார். ராஜித சேனாரத்ன, சந் திரிகா மற்றும் சிறிசேன அனை வரும் தங்கள் பாதுகாப்புக் குறித்து அச்சம் வெளியிட்டனர். வெள்ளைவான் நடவடிக்கை கள் இடம்பெறலாம் என்றார் குமாரணதுங்க நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு தாம் உயிரைக் கொடுக்கவும் தயாராய் இருப்ப தாக சிறிசேன குறிப்பிட்டார். அவர்கள் பேசியபோது கண் களில் கண்ணீர் பனித்திருந் ததும் தெரிந்தது.

சிறிகொத்தாவில் ஐ.தே. கவின் கூட்டம் முடிந்ததன் பின்னர் எதிர்க்கட்சித் தலைவ ரின் காரியாலயம் உள்ள மார்க் கஸ் பிளேஸிலுள்ள இடத்தில் விரிவுபடுத்தப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்களதும் பிரமுகர்கள தும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய் யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத் தில் கலந்துகொண்டவர்களில் ஆச்சரியமளிக்கும் விதத்தில் வண.மாதுளுவாவே சோபித தேரரும் காணப்பட்டார். சமத்து வத்துக்கும் சமூகநீதிக்குமான அமைப்பின் சார்பில் கையய ழுத்திடவும் அவர் முன்வந்தார். அந்தக் கூட்டத்தில் ஐ.தே.க. சார்பில் ரணில் விக்கிரமசிங்க, சஜித் பிரேமதாஸ, கரு ஜெய சூரிய, கபிர்ஹாசிம், மங்கள சமரவீர, ரவிகருணாநாயக்க மற்றும் பலர் கலந்துகொண்டி ருந்தனர். இந்தக் கூட்டத்தில் சிறி சேன உரை நிகழ்த்துகை யில், ஐ.தே.கட்சித் தலைவர் விக்கி ரமசிங்கவை தாம் நேரில் அல்லது தொலை பேசியில் கூட தொடர்பு கொண்டதில்லை.

ஆனால், அவரது குணாதிச யங்கள் பற்றிக் கேள்விப்பட் டிருப்பதாகவும் நாடாளுமன்ற செயற்பாடுகள் தொடர்பாக அவர் நிறைந்த அறிவுபடைத்தவர் என்பதைக் கண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார். திருமதி சந்திரிகா குமாரணதுங்கவை அம்மை யார் என்று அழைப்பதுபோல விக்கிரமசிங்கவை தாம் சேர் என்று அழைக்க விரும்புவதாக வும் கூறியதுடன் ஜனாதிபதி யாக வந்தாலும் அவ்வாறே அவ ரைத் தாம் அழைப்பார் என் றும் சொன்னார்.

Related Post