சிறிலங்கா சுதந்திர கட்சியின் தலைவர் பதவியை புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.
இந்த தீர்மானத்தை இன்று கூடவுள்ள சிறிலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் வைத்து அறிவிக்கவிருப்பதாக, முன்னாள் ஜனாதிபதியின் பேச்சாளர் விஜயாநந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.சிறிலங்கா சுதந்திர கட்சி பிளவடைவதை தடுக்கும் நோக்கில் அவர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார்.
அத்துடன், இலங்கை மக்களின் நலன்கள் மற்றும் நாட்டின் நிலையான தன்மையை பாதுகாக்கவும் இந்த தீர்மானம் உதவும் என்று அவர் கருதுகிறார்.அதேநேரம் கடந்த தேர்தலில் தமக்கு வாக்குகளை வழங்கிய 50 லட்சத்துக்கும் அதிகமான மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மகிந்தராஜபக்ஷ தெரிவிக்கப்பட்டுள்ளது.