சிறுபான்மை மக்களின் வாக்குகளோ அல்லது ஆதரவோ எமது ஜனாதிபதிக்கு தேவையில்லை என அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
கண்டியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அவர் இங்கு மேலும் தெரிவிக்கையில்,
நிறைவேற்று அதிகாரத்தை கொண்டே யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்தோம்.
தமிழ் புலம்பெயர் அமைப்புக்கள் ஈழ கனவை நனவாக்க கங்கணம் கட்டி கொண்டு இருக்கின்றது. வெளிநாட்டு சக்திகளும் ஊடுருவப்பார்க்கின்றது. இதற்கு உதாரணமே வட மாகாண சபையில் செங்கோல் வீசி எறியப்பட்டது.
யுத்தம் முடிந்தாலும் பிரச்சினைகள் தீர்வில்லை. ஆகவே நிறைவேற்று அதிகார முறையை உடனடியாக நீக்கமுடியாது மக்களின் தேவைகளை நாம் நிறைவேற்றியுள்ளோம்.
சிறுபான்மை மக்களோ அல்லது அவர்களின் அரசியல் கட்சிகளின் ஆதரவோ எமக்கு தேவையில்லை அவர்கள் ஆதரவின்றி எம்மால் வெற்றி பெறமுடியும் என்று தெரிவித்தார்.