Breaking
Sun. Dec 22nd, 2024

சிறுபான்மை மக்களுக்கு அநீதி ஏற்படாத வகையிலான தேர்தல் முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுபான்மை மக்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறைமை அமைய வேண்டும்.

பிரதான அரசியல் கட்சிகளும் இணைந்து சிறுபான்மை கட்சிகளை இல்லாமல் செய்ய முயற்சிக்கின்றன.

இந்த நிலைமை குறித்து அனைத்து சிறுபான்மை கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.

நாடு முழுவதிலும் பரந்து வாழும் அனைத்து இன மக்களினாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய நியாயமான தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறான நாடாளுமன்ற மற்றும் உள்ளுராட்சி மன்ற, மாகாணசபைத் தேர்தல் முறையை எமது கட்சி ஏற்றுக்கொள்கின்றது.

சிறுபான்மை கட்சிகளின் உரிமைகளை முடக்கும் வகையிலான தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்பட்டால் அதனை எமது கட்சி கண்டிப்பாக எதிர்க்கும்.

அனைத்து மக்களினதும் கருத்துக்களை அறிந்து சரியான தேர்தல் முறைமை அறிமுகம் செய்யப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

அரசியல் கட்சிகள், மதத் தலைவர்கள், புத்திஜீவிகள் மக்களின் கருத்துக்களை உள்ளடக்கி தேர்தல் முறையில் மாற்றம் செய்யப்பட வேண்டுமென அமைச்சர் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

By

Related Post