கொத்மலை, கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் முச்சக்கர வண்டியொன்றில் பாடசாலை சீருடைப் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் புத்தக பை ஆகியவற்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமானது, குற்றச் செயலொன்றுடன் தொடர்புபட்டது அல்ல என பொலிஸ் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.
சீருடை மற்றும் புத்தகப் பை ஆகியன மாணவியின் பாட்டியினால் மாணவியின் வீட்டில் ஒப்படைக்குமாறு கொடுத்து அனுப் பப்பட்டது என விசாரணைகளில் உறுதியான தைத் தொடர்ந்து கைதான 23 வயதுடைய இளைஞன் மன்றில் ஆஜர் செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நேற்று முன்தினம் கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் முச்சக்கர வண்டியொன்றில் பாடசாலை சீருடை, பெண்க ளின் உள்ளாடைகள் மற்றும் புத்தகப் பை ஆகியவற்றுடன் இளைஞர் ஒருவரை பொது மக்கள் பிடித்து தாக்குவதாக புசல்லாவ பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் குறித்த இளைஞனை கைது செய்தனர்.
இதன்போது முச்சக்கர வண்டியுடன் கை தான சந்தேக நபர் 23 வயதுடையவர் என வும் கட்டுக்கித்துலை பிரதேசத்தை சேர்ந் தவர் எனவும் பொலிஸார் கண்டறிந்தனர். அத னைத் தொடர்ந்து பாடசாலை சீருடை கள் மற்றும் புத்தகப் பை, உள்ளாடைகள் தொடர்பில் விசாரணை செய்து ள்ளனர்.
இதன்போதே உண்மை தெரியவந்துள் ளது. சீருடை மற்றும் புத்தகப் பைக்கு சொந்த மான மாணவியின் பாட்டி வீடு பாடசாலைக்கு அருகில் உள்ள நிலையில், குறித்த மாணவி பாட்டி வீட்டுக்கு சென்றுவிட்டு உடைகளை மாற்றிய பின்னர் தனது வீட்டுக்கு சென்றுள்ளார். இதன்போது அவர் சீருடைகளையும் புத்தகப் பையினையும் அங்கேயே வைத்துவிட்டு சென்றுள்ளார். மறு நாள் அவர் பாடசாலை செல்ல வேண்டும் என்பதற்காக பாட்டி, அவற்றை குறித்த முச்சக்கர வண்டி சாரதியிடம் கொடுத்து மாணவியின் வீட்டில் கொடுக்குமாறு கொடுத்தனு ப்பியுள்ளார்.
இதனை பாட்டி, மாணவி மற்றும் சந்தேக நபர் உள்ளிட்ட பலரின் வாக்கு மூலங்கள் ஊடாக பொலிஸார் உறுதி செய்துள்ளனர்.
இந் நிலையில், முச்சக்கர வண்டியில் இருந்த உள்ளாடைகள் தொடர்பில் விசாரணை நடத்திய பொலிஸார், குறித்த இளைஞனுக்கு பெண்களின் உள்ளாடைகளை சேர் க்கும் ஒரு வகை மானசீக பிரச்சினை உள்ளதைக் கண்டறிந்துள்ளனர்.
இதனையடுத்து நேற்று சந்தேக நபரை மன்றில் ஆஜர்படுத்திய பொலிஸார் விசாரணை அறிக்கையையும் மன்றுக்கு சமர்ப்பித் தனர். விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பித்த பொலிஸார் அந்த இளைஞ னை மனநல வைத்தியர் ஒருவரிடம் சிகிச்சைகளுக்காக அனுப்புமாறு கோரினார்.
எனினும் இதன்போது மன்றில் இளைஞ னின் உறவினர்கள் ஆஜராகியிருந்த நிலை யில், பொலிஸாரின் கோரிக்கையை நிராக ரித்த நீதிவான் இளைஞனை உறவினர்களிடம் ஒப்படைத்ததுடன், அவர்கள் மன நல மருத்துவர் ஒருவரை நாடலாம் என ஆலோசனை வழங்கினார் என்றார்.