Breaking
Mon. Dec 23rd, 2024

“நான் ஜன்னல் ஊடாக அந்த அறைக்குள் நுழைந்தேன். அப்­போது அங்கு அனை­வரும் உறங்கிக் கொண்­டி­ருந்­தனர். நான் சிறு­மியை தூக்கிக்கொண்டு ஒரு­வாறு அதே ஜன்­ன­லி­னா­லேயே வெளியே வந்தேன்.

நானே சேயாவின் கொடூர கொலைக்கு பொறுப்பு..” கொட்­ட­தெ­னி­யாவ – கடல்­கம, அக்­க­ரங்­கஹ பிர­தே­சத்தின் சிறுமி சேயா செதவ்மி படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்ட பிர­தான சந்­தேக நப­ரான கொண்­டயா எனப்­படும் துனேஷ் பிரிய சாந்­தவின் மூத்த சகோ­தரன் சமன் ஜயலத் குற்றப் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கிய வாக்கு மூலத்தின் ஒரு பகு­தியே அது.

இந்­நி­லையில் முழு நாட்­டையும் அதிர்ச்­சியில் உறையச் செய்து, உணர்­வு­களை தட்­டி­யெ­ழுப்பி மரண தண்­ட­னையை உடன் அமுல் செய் என அழுத்­தத்தை பிர­யோ­கிக்கும் அள­வுக்கு இட்டுச் சென்ற முன்­பள்ளி மாணவி சேயா செதவ்­மியின் படு­கொலை விசா­ர­ணை­களில் தற்­போது புதிய திருப்பம் ஏற்­பட்­டுள்­ளது.

கடந்த செப்­டெம்பர் மாதம் 12ஆம் திகதி அதி­காலை வேளை சேயா காணாமல் போனமை தொடர்­பான முறைப்­பாடு கம்­பஹா மாவட்­டத்தின் திவு­லப்­பிட்­டிய தேர்தல் தொகு­தியின் கொட்­ட­தெ­னி­யாவ பொலி­ஸா­ருக்கு கிடைத்­தது. அதனைத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட்ட தேடு­தல்­களின் போதே சேயா பாலியல் ரீதி­யாக வன்­பு­ண­ரப்­பட்டு கழுத்து நெரித்து கொடூ­ர­மாக கொலை செய்­யப்­பட்­டி­ருந்த நிலையில் மறுநாள் (செப்­டெம்பர் 13ஆம் திகதி) வீட்­டி­லி­ருந்து 200 மீற்றர் தூரத்தில் இருந்த ஒடையின் அருகே காட்டுப் பற்­றைக்குள் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்டாள்.

இதனைத் தொடர்ந்து விசா­ர­ணைகள், மேல் மாகா­ணத்துக் பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜய­சுந்­தர, மேல் மாகாணம் – வடக்குப் பிரி­வுக்கு பொறுப்­பான பிரதிப் பொலி ஸ்மா அதிபர் எல்.ஜி.குல­ரத்ன ஆகி­யோரின் மேற்­பார்­வையில் நீர்­கொ­ழும்பு சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­ச­கரின் வழி­காட்­டலின் கீழ் கொட்டதெனி­யாவ பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி உதித்த குமா­ரவின் கீழ் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

பல பொலிஸ் குழுக்கள் இந்த விசா­ர­ணை­களை மேற்­கொண்ட நிலையில் கடந்த செப்டெம்பர் 16ஆம் திகதி இது தொடர்­பி­லான விசா­ர­ணைகள் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்­க­கோனின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரட்ன, புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்­சகர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில், பிர­தான பொலிஸ் பிரி­சோ­தகர் ரவீந்திர விம­ல­சிறி தலை­மை­யி­லான பொலிஸ் குழு­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டது.

இதன் தொடரில் 18 வய­தான மாண­வனும் 32 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்தை ஒரு­வரும் ஆரம்­பத்தில் கொட்­ட­தெ­னி­யாவ பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்டு, டீ.என்.ஏ.சோத­னையின் பின்னர் அவர்கள் நிர­ப­ரா­திகள் என விடு­தலை செய்­யப்­பட்­டனர்.

இந்­நி­லையில் புல­னாய்வுப் பிரி­வினர் முன்­னெ­டுத்த விசா­ர­ணை­களில் கடந்த 23ஆம் திகதி கம்­பஹா – பெம்­முல்ல பிர­தே­சத்தில் வைத்து பிர­தான சந்­தேக நப­ரான ‘கொண்­டயா’ என்ற துனேஷ் பிரி­ய­சாந்­தவை (வயது 32) புல­னாய்வுப் பிரிவு கைது செய்து சேயா விவ­காரம் தொடர்பில் பல தக­வல்­களை வெளிப்­ப­டுத்திக் கொண்­டது.

குறித்த வாக்கு மூலத்­துக்கு மேல­தி­க­மாக மேலும் பல வாக்குமூலங்­களை புல­னாய்வுப் பிரி­வினர் கொண்­ட­யா­வி­ட­மி­ருந்து பல்­வேறு சந்­தர்ப்­பங்­களில் பெற்­றுள்­ளனர். அந்த வாக்குமூலங்கள் ஒன்­றுக்­கொன்று பரஸ்­பர வேறு­பாட்டை காட்­டவே புல­னாய்வுப் பிரி­வினர் தமது விசா­ர­ணை­களை விரி­வு­ப­டுத்­தினர்.

ஏற்­க­னவே, கொண்­ட­யாவை கைது செய்ய முன்னர் புல­னாய்வுப் பிரிவு அவ­ரது சகோ­த­ர­ரான சமன் ஜய­லத்தை பொறுப்பில் எடுத்து விசா­ரணை செய்­த­தி­லேயே கொண்­ட­யாவை கைது செய்ய முடிந்­தது. ஏனெனில் புல­னாய்வுப் பிரிவின் விசா­ர­ணை­களில் சமன், கொண்­டயா தொடர்பில் கிடைக்­கப்­பெற்ற கடந்த கால தக­வல்­களே அதற்கு கார­ண­மாக அமைந்­தன.
அதன்­போதே சேயாவை கொண்­ட­யாவே கொலை செய்­த­தா­கவும், அதனை தன்­னிடம் கூறி அவர் தன்னை அச்­சு­றுத்­தி­ய­தா­கவும் சமன் ஜயலத் புல­னாய்வுப் பிரி­வுக்கு குறிப்­பிட்­டி­ருந்­த­துடன், கொண்­ட­யா­வுக்கு எதி­ராக சாட்சி சொல்­லவும் முன்­வந்­தி­ருந்தார்.

எனினும் கொண்­ட­யாவின் கைதின் பின்னர், அவர் புல­னாய்வுப் பிரி­வுக்கு வழங்­கிய வாக்குமூலம் ஒன்றில், தனது அண்ணன் சமனே இக் கொடூ­ரத்தை செய்­த­தாக குறிப்­பிட்­டுள்ளார்.

இத­னை­ய­டுத்து புல­னாய்வுப் பிரி­வி­னரால் சமன் ஜயலத் தொடர்ச்­சி­யாக பின்­தொ­ட­ரப்­பட்டு அவ­ரது செயற்­பா­டு­களில் ஏற்­பட்ட சந்­தே­கங்­களை வைத்தே கடந்த அக்­டோபர் 2 ஆம் திகதி நீர்­கொ­ழும்பில் வைத்து அவரை கைது செய்­தனர்.

அதனை தொடர்ந்து 72 மணி­நேரம் அவரை தடுத்­து­வைத்து புல­னாய்வுப் பிரிவு விசா­ரணை செய்­ததில் சேயா படு­கொலை பொறுப்பை சமன் ஜயலத் ஏற்றுக் கொண்­டுள்ளார். 36 வய­தான ஜயலத், கொட்­ட­தெ­னி­யாவ பிர­தே­சத்தில் கொண்­ட­யா­வுடன் தற்­கா­லி­க­மாக தங்­கி­யி­ருந்த சம­யமே இதனை புரிந்­த­தா­கவும் அதில் குறிப்­பிட்­டுள்ளார்.பொலிஸ் தக­வல்­களில் அடிப்­ப­டையில் அந்த வாக்கு மூலத்தை சுருக்­க­மாக நாம் தரு­கிறோம்.

“நான் வீடு­க­ளுக்குள் புகுந்து பெண்கள் உறங்­கு­வதை பார்த்து ரசிக்கும் பழக்­க­வ­ழக்கம் கொண்­டவன். அன்று நான் அந்த பிள்­ளையின் வீட்­டுக்கு போனேன். போகும் போது அந்த சிறு­மியின் அம்மா டி.வி. பார்த்துக் கொண்­டி­ருந்தார். அப்­போது வீட்­டுக்குள் நுழைய சந்­தர்ப்பம் இருக்­க­வில்லை. வீட்டில் யாரும் இருப்பர் என அஞ்­சினேன். பிள்­ளை­களும் அப்­போது இருந்­தனர். பின்னர் இரவு வெகு நேரம் நான் அப்­ப­கு­தியில் சுற்றிக் கொண்­டி­ருந்தேன்.

மீண்டும் அந்த வீட்­டுக்­க­ருகில் வந்தேன். அப்­போது அறையின் மின் குமிழ்கள் எரிந்து கொண்­டி­ருந்­தன. ஜன்னல் பக்கம் போனேன் ஜன்னல் கதவை திறக்க முற்­பட்ட போது அது திறந்தே இருந்­தது. அந்த ஜன்னல் ஊடாக அறைக்குள் நுழைந்தேன். ஜன்­னலில் இருந்து கட்­டிலில் கால்­வைத்தே உள் நுழைந்தேன். அப்­போது அனை­வரும் நித்­தி­ரையில் இருந்­தனர்.

பின்னர் வீட்டின் உள்ளே கத்­தி­யொன்றை தேடினேன். அது எனக்கு கிடைக்­க­வில்லை. கத்­தி­யில்­லாமல் ஒரு பெண் அருகே சென்று, அவள் கூச்­ச­லிட்டு ஊரை கூட்­டினால் சிக்கிக் கொள்வோம் என பயம் வந்­தது.

அப்­போது எண்­ணத்தை மாற்­றினேன். அந்த சிறு­மியைக் கொண்டு செல்ல தீர்­மா­னித்தேன். அப்படியே தூக்கிச்சென்றேன். இத­னை­விட இந்த கொடூ­ரத்தின் பொறுப்பை ஏற்க தான் கொண்­ட­யாவை வற்புறுத்தியதாகவும் அதன்படியே அவர் இதனை ஏற்றதாகவும் சமன் ஜயலத் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகின்றது. எவ்வாறாயினும் சமன் ஜயலத் இக் கொடூரம் குறித்து மினுவாங்கொடை நீதிவானுக்கு நேற்று முன்தினம் இரகசிய வாக்கு மூலம் ஒன்றை வழங்கியுள்ள நிலையில், டீ.என்.ஏ. சோதனைக்கு நேற்று உட்படுத்தப்பட்டார்.

அதன் பிரகாரம் டீ.என்.ஏ. முடிவு கிடைத்ததும் சேயாவை கொன்றது கொண்டயாவா அல்லது அவன் சகோதரனா என்பது தெளிவாகி விடும். அதுவரை இருவரும் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வெவ்வேறு கூண்டுகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

By

Related Post