Breaking
Mon. Dec 23rd, 2024

கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அத்­த­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன் பள்ளிச் சிறுமி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு துணி­யி­னா­லான பட்டி ஒன்­றினால் கழுத்து நெரிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள இரு சந்­தேக நபர்­களும் விஷேட மரபணு பரிசோதனைக்கு (டீ.என்.ஏ.) உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ளனர்.

அதன்­படி சந்­தேக நபர்­களின் உயி­ரியல் மாதி­ரி­களைப் பெற்று பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில் டீ.என்.ஏ. பரி­சோ­த­னை­க­ளுக்கு உட்­ப­டுத்தி, சிறுமி சேயா செதவ்­மியின் சட­லத்தில் இருந்து பெறப்­பட்ட டீ.என்.ஏ.மாதி­ரி­க­ளுடன் ஒப்­பிட்டு சந்­தேக நபர்கள் தொடர்­பி­லான வெளிப்­ப­டுத்­தல்­களை மேற்­கொள்ள பொலிஸார் தீர்­மா­னித்­துள்­ளனர்.

இந் நிலையில் கொட்­ட­தெ­னி­யாவ பொலிஸார் ஊடாக மினு­ வாங்­கொடை நீதிவான் நீதி­மன்­றுக்கு இது தொடர்­பி­லான உத்­த­ர­வொன்­றினை பிறப்­பிப்பதற்கான கோரிக்கை முன் வைக்­கப்­பட்­டுள்­ள­தாக பதில் பொலிஸ் பேச்­சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி தெரி­வித்தார்.

அத்­துடன் கைதா­கி­யுள்ள 18 வய­தான உயர்­தர பரீட்சை எழு­தி­விட்டு பெறு­பேற்­றுக்­காக காத்­தி­ருக்கும் மாண­வனின் மடிக் கணி­னியில் ஏரா­ள­மான நீலப்­ப­டங்கள் பதிவு செய்து வைக்­கப்­பட்­டுள்­ளமை விசா­ர­ணை­களில் தெரி­ய­வந்­துள்­ளதை அடுத்து, அந்த கணி­னியை கொழும்பு பல்­க­லைக்­க­ழ­கத்தின் கணி­னிகள் தொடர்­பி­லான ஆய்­வு­கூ­டத்­துக்கு அனுப்பி, அதில் ஏற்­க­னவே பதி­வாகி அழிக்­கப்­பட்­ட­வைகள் மற்றும் தற்­போது பதி­வா­கி­யுள்­ள­வைகள் தொடர்பில் விஷேட அறிக்கை ஒன்­றினைப் பெற்­றுக்­கொள்ள நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் பிரி­யந்த ஜய­கொடி மேலும் தெரி­வித்தார்.

கடந்த 19 ஆம் திகதி காணாமல் போன சிறுமி சேயா, 20 ஆம் திகதி காலை வேளை வீட்டில் இருந்து 200 மீற்றர் தூரத்தில் உள்ள ஓடை ஒன்­றுக்கு அருகில் இருந்து சட­ல­மாக மீட்­கப்­பட்டார். கொட்­ட ­தெ­னி­யாவ பொலிஸார் இது தொடர்­பி­லான விசா­ர­ணை­களை ஆரம்­பித்த நிலையில் பொலிஸ் மா அதி­பரின் உத்­த­ர­வுக்கு அமைய குற்றப் புல­னாய்­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி சென­வி­ரத்ன, பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் சுதத் நாக­ஹ­முல்ல ஆகி­யோரின் மேற்­பார்­வையில் கொட்­ட­தெ­னி­யாவ – படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­திக்கு சென்ற குற்றப் புல­னாய்வுப் பிரிவின் 3 பொலிஸ் குழுக்கள் பிர­தான விசா­ர­ணையைப் பொறுப்­பேற்­றது.

இந்த நிலையில் சந்­தே­கத்தின் பேரில் இரு­வரை நேற்று முன் தினம் அதி­காலை பொலிஸார் கைது செய்­திருந்தனர். பொலி­ஸா­ருக்கு கிடைத்த பெள­தீக சாட்­சிகள், அறி­வியல் ரீதி­யி­லான தட­யங்­களை வைத்தே சந்­தே­கத்தின் பேரில் அவ்­வி­ரு­வரும் கைது செய்­யப்­பட்­ட­தாக விசா­ர­ணை­க­ளுக்கு பொறுப்­பான உயர் அதி­காரி ஒருவர் தெரி­வித்தார்.

சிறுமி சேயா செதவ்­மியின் வீட்­டுக்கு அருகில் வசித்து வந்த 18 வய­து­டைய இளைஞன் வீட்டில் இருந்து சிறிது தூரத்தில் உள்ள 35 வய­து­டைய ஒரு பிள்­ளையின் தந்தை ஆகி­யோரே சந்­தே­கத்தின் பேரில் இவ்­வாறு கைது செய்­யப்­பட்டு நேற்று முன் தினம் மாலை மினு­வாங்­கொடை மேல­திக நீதிவான் டீ.ஏ.ருவன் பத்­தி­ரண முன்­னி­லையில் ஆஜர்­ப­டுத்­தப்­பட்டு எதிர்­வரும் 28 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.இந்த சந்தேக நபர்கள் இருவருமே விசேட டி.என்.ஏ. பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Related Post