Breaking
Wed. Dec 25th, 2024

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் சம்­பந்­த­மான பிரச்­சி­னை­களை மாத்­திரம் 1929 என்ற தொலை­பேசி இலக்­கத்­திற்கு முறை­யி­டு­மாறு சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

கடந்த சில நாட்­க­ளாக குறித்த 1929 தெலை­பேசி இலக்­கத்தின் ஊடாக அநா­வ­சி­ய­மற்ற முறைப்­பா­டுகள் கிடைக்கப் பெறு­வ­தாக அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

கடந்த வெள்ளிக்­கி­ழமை குறித்த தொலை­பேசி இலக்­கத்­திற்கு 1290 முறைப்­பா­டுகள் கிடைத்­துள்­ள­தா­கவும் அவற்றில் 1202 முறை ப்­பா­டுகள் தேவை­யற்­றவை என்றும் சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது.

அவற்றில் சிறு­வர்­களை பாட­சா­லைக்கு சேர்ப்­பதில் உள்ள பிரச்­சி­னைகள், சர்­வ­தேச பாட­சா­லை­களின் கட்­டணப் பிரச்­சி­னைகள், வீடு, காணி தொடர்­பான பிரச்­சி­னைகள் மற்றும் நிதிப் பிரச்­சி­னைகள் தொடர்­பான முறைப்­பா­டுகள் அதிகம் கிடைத்­துள்­ள­தாக சிறுவர் பாது­காப்பு அதி­கா­ர­சபை தெரி­வித்­துள்­ளது. இவ்­வா­றான தொலை­பேசி அழைப்­புக்கள் கிடைக்கும் போது சிறுவர் துஷ்­பி­ர­யோ­கங்கள் தொடர்­பான பிரச்­சி­னை­களை முறை­யிடும் சந்­தர்ப்­பங்கள் இழக்­கப்­ப­டு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆகவே சிறுவர் துஷ்­பி­ர­யோகம் சம்பந்த மான பிரச்சினைகளை மாத்திரம் 1929 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு முறையிடு மாறு சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை கேட் டுள்ளது.

By

Related Post