Breaking
Mon. Mar 17th, 2025

சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடுகளை மேற்கொள்வதற்கு 24 மணிநேர சேவை, முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, மகளிர் மற்றும் சிறுவர்கள் அபிவிருத்தி அமைச்சர் சந்திரானி பண்டார தெரிவித்துள்ளார்.

அதன்பிரகாரம், 1929 மற்றும் 1938 போன்ற இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்தி சிறுவர்கள் மற்றும் மகளிருக்கு எதிராக நடைபெறும் துஸ்பிரயோகங்கள் தொடர்பாக முறையிடலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இந்த சேவையானது காலை 8.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மாத்திரமே செயற்பட்டதாகவும் தற்போது இந்த சேவை 24 மணித்தியாலமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Related Post