ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நிட்டம்புவை பிரதேசத்தில் நேற்று நடைபெற்ற வைபவமொன்றில் உரையாற்றும் போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி, வடக்கின் வித்யாவும் தெற்கின் சேயாவும் அநியாயமாக சிதைக்கப்பட்டதை விட ஒரு சில ஊடகங்கள் அவர்களை மோசமாக சிதைத்துள்ளன. ஊடகங்கள் போன்றே குறித்த மரணங்களின் போது ஒருசிலர் தங்கள் மொபைல் போனில் போட்டோக்களை எடுத்து அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இறந்தவர்களை அவமரியாதை செய்கின்றார்கள்.
இதன் காரணமாக தற்போது நடைமுறையில் இருக்கும் சட்டங்களை விட புதிய சட்டங்களின் ஊடாக சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. அதற்காக விசேட ஜனாதிபதி செயலணியொன்று உருவாக்கப்படவுள்ளது.
அதே நேரம் பெற்றோரும் பிள்ளைகளின் பாதுகாப்பு தொடர்பில் தீவிர கவனத்துடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளவேண்டி ஏற்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.