Breaking
Thu. Jan 9th, 2025

மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள சிறுவர் பாதுகாப்பு குழு (YCRMC)மற்றும் சிறுவர்கழங்கள் என்பவற்றின் செயற்பாடுகளை மேம்படுத்தும் நோக்கில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிதி உதவியுடன் வோர் சைல்ட் நிறுவனத்தின் அனுசரனையில் எஸ்கோ  நிறுவனத்தின் வழிகாட்டலில் அலுமாரிகள் வழங்கி வைக்கப்பட்டன.

உதவி பிரதேச செயலாளர் ஏ.நவேஸ்வரன் தலைமையில் பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற நிகழ்வில் வோர் சைல்ட் நிறுவனத்தின் இலங்கைக்கான வதிவிடப் பிரதி நிதி மரினா டொறிஸ் லீனஸ் பொன்னக்கோன், எஸ்கோ நிறுவனத்தின் பணிப்பாளர் எஸ்.பிரித்தியோன், பிரதேச செயலக உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டு அலுமாரிகளை வழங்கி வைத்தனர்.

பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பணிரெண்டு கிராம சேவகர் பிரவில் உள்ள சிறுவர் பாதுகாப்பு குழு (YCRMC) மற்றும் சிறுவர் கழகங்களுக்கு இருபத்தி நாலு அலுமாரிகள் வழங்கி வைக்கப்பட்டன.

Related Post