Breaking
Sun. Dec 22nd, 2024

-நாச்சியாதீவு பர்வீன் –

சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் நவீன பொறிமுறை அவசியம். இப்போது நாட்டில் பல பிரதேசங்களில் சிறுவர் துஷ்பிரயோகமும்,சிறுவர்கள் மத்தியில் போதைவஸ்த்து பாவனை பழக்கத்தை அதிகரிக்க வைக்கின்ற சட்டவிரோத செயற்பாடுகளும் அதிகம் காணப்படுகின்றன இவற்றை கட்டுப்படுத்தவும், போதைக்கு அடிமையாகிக்கொண்டிருக்கும் இளம் பரம்பரையை மீட்டெடுக்கவும் நவீன பாதுகாப்பு பொறிமுறை அவசியம் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் சட்டத்தரணி எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். சிறுவர் பாதுகாப்பு தொடர்பில் கருத்து வெளியிடும் பொதே பிரதியமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில்

சிறுவர்கள் இந்த நாட்டின் விலைமதிக்க முடியாத சொத்துக்கள் ஆவார்கள். மிகவும் பெறுமதியான பொருட்களை நாம் கண்ணும் கருத்துமாக எவ்வளவு கரிசனையோடு பாதுகாக்கின்றோம். ஆனால் நாம் பெற்ற பிள்ளைகளிடத்தில் அந்த கரிசனையை நாம் தீவிரப்படுத்த வேண்டும். சிறுவர்கள் விடயத்தில் பெற்றோர்களின் அசமந்தப்போக்கே அவர்களின் வாழ்க்கை தீயவழியில் செல்வதற்கான மிக முக்கிய காரணம். அனேகம் பெற்றோர் வறுமையை காரணம் காட்டி தமது பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பாராமுகமாக இருந்து விடுகின்றனர். சிறுவர்கள் வழிபடுவதற்கு அதுவும் முக்கிய காரணமாகும்.
>
> தன் பிள்ளை யாருடன் சேர்ந்து விளையாடுகிறது, பிள்ளையின் நட்புப்பட்டியலில் சமூக விரோதமான செயற்பாடுகளில் ஈடுபடுவோர் உள்ளனரா? பகுதி நேர மேலதிக வகுப்புக்கு செல்லும் பிள்ளை சரியாக அங்கு செல்கின்றதா? வகுப்பு முடிந்தவுடன் நேராக வீட்டுக்கு வருகின்றதா? பிள்ளையின் அன்றாட செயற்பாடுகள் என்ன என்கின்ற அவதானத்தை பிள்ளைகளின் மீது செலுத்த வேண்டும். அப்போதுதான் சிறுவர்கள் மீதான வன்முறைகளை தடுக்கவும்,தவிர்க்கவும் முடியும். சிறுவர் துஷ்பிரயோகமும்,சட்டவிரோத போதை வஸ்த்துப்பாவனைக்கும் கடுமையான சட்ட நடவடிக்கைகளை அமுல்படுத்த வேண்டும். இதன்போது சிறுவர் துஷ்பிரயோகங்களை கட்டுப்படுத்த முடியும்.
>
> இந்த நல்லாட்சியில் மக்கள் பலத்த நம்பிக்கையில் இருக்கின்றனர்.அந்த நம்பிக்கையை காப்பாற்றவேண்டிய பொறுப்பும்,கடமையும் நல்லாட்சி அரசின்மீது இருக்கின்றது. அந்த வகையில் இந்த நாட்டின் எதிர்கால தலைவர்களாகிய சிறுவர்களுக்கு நாம் பாதுகாப்பான ஒரு சூழலை அமைத்துக்கொடுப்பது இன்றியமையாத ஒன்றாகும்.அதனை நிறைவேற்றும் காலத்திற்காக நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம் என கூறினார்.

By

Related Post