சிறு தோட்ட பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் தேயிலை,தென்னை மற்றும் இறப்பர் பயிர்செய்கையாளர்களுக்கு மானியங்கள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு ஹெக்டயருக்கு குறைவானளவில் தேயிவை,தென்னை, இறப்பரினை பயிரிடும் பயிர்ச் செய்கையாளர்களுக்கே 8 இலட்சம் மானியத் தொகை வழங்கப்படவுள்ளதாக அரச தகவல் திணைக்களத்தினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் குறித்த உற்பத்தியாளர்களுக்கு 8 இலட்சம் மானிய தொகையானது ஒருவருடத்திற்கு வழங்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வேலைத்திட்டமானது காலி மாவட்டத்தில் சிறிய நில உரிமையாளர்கள் 600பேருக்கு நாளை மறுதினம் வழங்கப்படவுள்ளதாகவும் அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.