Breaking
Mon. Dec 23rd, 2024

மாலை­தீவு முன்னாள் ஜனா­தி­பதி மொஹமட் நஷீட்­டிற்கு விதிக்­கப்­பட்ட 13 வருட சிறைத்­தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­ட­தற்கு ஒரு மாதத்­திற்குப் பின்னர் அவர் சிறை திரும்­பி­யுள்­ள­தாக அவ­ரது கட்சி திங்­கட்­கி­ழமை தெரி­வித்­தது.

மாலை­தீவின் தலை­ந­க­ரி­லுள்ள வீட்­டி­லி­ருந்து நஷீட் ஞாயிற்­றுக்­கி­ழமை இரவு மாபுஷி தீவி­லுள்ள பாது­காப்பு பலப்­ப­டுத்­தப்­பட்ட சிறைச்­சா­லைக்கு அழைத்துச் செல்­லப்­பட்ட வேளை பொலிஸார் மற்றும் சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்கும் அவ­ரது மாலை­தீவு ஜன­நா­யகக் கட்­சியின் ஆத­ர­வா­ளர்­க­ளுக்­கு­மி­டையே மோதல் இடம்­பெற்­றுள்­ளது.

தண்­டனை மாற்­றப்­பட்­டி­ருந்த நிலையில் நஷீட் சிறைச்­சா­லைக்கு திரும்­பவும் அனுப்பி வைக்­கப்­பட்­டமை அர­சி­ய­ல­மைப்பை மீறும் செயல் என அந்தக் கட்சி குற்­றஞ்­சாட்­டி­யுள்­ளது.

2012ஆம் ஆண்டு பெப்­ர­வரி மாதம் நஷீட் ஆட்சி கவிழ்க்­கப்­பட்ட போது ஊழல் குற்­றச்­சாட்டின் கீழ் அவர் கைது­செய்­யப்­பட்­டி­ருந்தார்.மாலை­தீவின் ஜன­நா­யக முறையில் தெரிவு செய்­யப்­பட்ட முத­லா­வது தலை­வ­ரான நஷீட்­டிற்கு கடந்த மார்ச் மாதம் கடு­மை­யான தீவி­ர­வா­தத்­திற்கு எதி­ரான சட்­டங்­களின் கீழ் 13 வருட சிறைத்­தண்­டனை விதிக்­கப்­பட்­டது.
இந்­நி­லையில் கடந்த ஜூலை 19 ஆம் திகதி அவ­ரது தண்­டனை வீட்டுக் காவ­லாக குறைக்­கப்­பட்­டது.

ஜனா­தி­பதி அப்­துல்லா யமீனின் ஆட்சியானது நஷீட்டை மௌனமாக்கும் முகமாகவே அவர் மீது குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளதாக அவரது ஆதரவாளர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.

Related Post