Breaking
Sun. Mar 16th, 2025

பாடசாலை, பல்கலைக்கழகங்கள் என்ற நிலை மாறி தற்போது சிறைச்சாலைகளிலும் பகிடிவதைகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகிடிவதைகளுக்கு முகம் கொடுத்திருப்பது வெலிகட மற்றும் கொழும்பு சிறைச்சாலைகளுக்கு மாற்றலாகி சென்றுள்ள சிறைச்சாலை காவலர்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த காவலர்கள் தமது விடுதிகளில் தங்கியிருந்த போது கடந்த சில நாட்களுக்கு முதல் நள்ளிரவு 12 மணிக்கும், அதிகாலை 3 மணிக்கும் சிறைச்சாலையில் உள்ள சிலரால் இவர்கள் பகிடிவதைக்கு உள்ளாகியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது இவர்கள் தாக்குதல் சம்பவத்திற்கும் முகங்கொடுத்துள்ளதாகவும், இந்த பகிடிவதையினைத் தாங்கிக் கொள்ள முடியாத காவலர்கள் இருவர் தங்கள் பணியை விட்டுச்சென்றுள்ளதுடன், மேலும் ஒருவர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாகவும் சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த சிறைச்சாலை காவலர்களுடைய பாதுகாப்புக் கருதி விடுதிகளில்இருந்த இவர்களை சிறைச்சாலை பயிற்சி பாடசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

By

Related Post