Breaking
Sat. Jan 11th, 2025
ஏ.எச்.எம் பூமுதீன்
மன்னார்- சிலாவத்துறை பிரதேசத்தில் அடைமழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கை அடுத்து ஸ்தலத்திற்கு உடன் விஜயம் செய்த வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன், அங்கு மேற்கொள்ள வேண்டிய உடனடி தேவைகள் குறித்து அதிகாரிகளுடன் ஆராய்ந்துள்ளார்.
முள்ளிக்குளம், பாலைக்குளி, கரடிக்குளி ,காயாநகர் போன்ற கிராமங்களுக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருப்பது குறித்தும் அதிகாரிகள் ,கடற்படை மற்றும் இராணுவத்தினருடன் கலந்துரையாடியுள்ளார்.
கல்லாத்து பாலத்தின் மேலாக நீர் பாய்ந்து ஓடுவதால் மேற்படி கிராமங்களுக்கான போக்குவரத்தில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை நாளை வரை நீடிக்கும் பட்சத்தில் மக்களுக்கான மாற்று போக்குவரத்து வழி குறித்து ,அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
இதற்கு பூரண ஒத்துழைப்பை வழங்க கடற்படை மற்றும் இராணுவத்தினரும் முன்வந்துள்ளதாகவும் ரிப்கான் பதியுதீன் தெரிவித்தார்.
இதேவேளை வெள்ளம் அணர்த்தம் தொடர்பாக மக்களுக்கு வேண்டிய அத்தியவசிய பணிகளை நிறைவேற்றிக் கொடுப்பது தொடர்பில் அணர்த்த முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் திருமதி முகம்மட், மன்னார் அரசாங்க அதிபர் மற்றும் பிரதேச செயலாளர் ஆகியோருடன் ரிப்கான் பதியுதீன் கலந்துரையாடியுள்ளார்.
ஒஸ்ரியா நாட்டுக்கு இன்று அதிகாலை விஜயம் செய்துள்ள அமைச்சர் ரிசாத் பதியுதீன் இது  தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை எடு;குமாறும் வடமாகாண சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீனை பணித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

Related Post