Breaking
Wed. Jan 8th, 2025

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் நிதி ஒதுக்கீட்டில் முசலி பிரதேச சபைக்குட்பட்ட சிலாவத்துறை, கூலாங்குளம், தம்பட்ட முசலிகட்டு மையவாடியின் சுற்றுமதில் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (20) இடம்பெற்றது.

15 இலட்சம் ரூபா முதற்கட்ட நிதி ஒதுக்கீட்டில் இந்த வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

முசலி பிரதேச சபையின் பிரதித் தவிசாளர் முகுசீன் றயீசுத்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபியான், , மன்னார் பிரதேச சபை தவிசாளர் முஜாஹிர், பிரதேச சபை உறுப்பினர் இக்பால், மீள்குடியேற்ற செயலணியின் மன்னார் மாவட்ட இணைப்பாளர் முஜீப், தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வடமாகாண பணிப்பாளர் முனவ்வர் மற்றும் சிலாவத்துறை பள்ளிவாசல் நிர்வாகத்தினர் உட்பட மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும், ஊர்மக்களும் பங்கேற்றிருந்தனர்.

(ன)

Related Post