Breaking
Sat. Jan 11th, 2025

-ஊடகப்பிரிவு-

கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் மேற்பார்வையின் கீழ் இயங்கும் இலங்கை சதொச நிறுவனமானது இலங்கைத்தீவில் மிகவும் அதிகம் பேரால் நம்பி விரும்பப்படும் ஒரே ஒரு நிறுவனமாகும். தொடர்ச்சியாக 69 வருடங்களாக வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெற்றிருப்பதானது சதொச நிறுவனத்தின் குறிப்பிட்டுச் சொல்லதக்க மிகப் பெரிய சாதனையாகும்.

இச்சாதனையின் வலிமை காரணமாக, குஆஊபு பிரிவின் 2018 ஆம் ஆண்டிற்கான ளுடுஐஆ NஐநுடுளுநுN (சிலம் நீல்சன்) விருது இலங்கை சதொச நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
பல சுப்பர் மார்கெட் நிறுவன சங்கிலித்தொடர்கள் விருதுக்காக ஊநுழுஇ னுசு.ளு.ர்.ஆ. குயுசுழுளு இனால் தேர்வு செய்யப்பட்ட போதும் சதொச மீது வாடிக்கையாளரின் நம்பிக்கை காரணமாக எல்லா சுப்பர் மார்க்கெட் தொடர்களிலும் பார்க்க முதல்தரமான நிறுவனமாக சதொச வெற்றிபெற்று விருதைப் பெற்றுக்கொண்டது.

எங்கள் மீது வாடிக்கையாளர் கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக அவர்கள் எங்களை இந்த நிலைக்கு உயர்த்தி வைத்துள்ளார்கள். இந்த நிலைக்கு எங்களை உயர்த்திய மக்கள் எம்மீது வைத்த நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்கும் அத்துடன் பொருட்களின் விலையை முன்னரிலும் பார்க்க இன்னும் குறைந்த விலையிலும் வழங்கவும் மொத்தத்தில் சந்தை விலையை பொதுவில் தீர்மானிக்கும் சக்தியாக விளங்கவும் ஆயத்தமாக உள்ளோம்.

கூடுமானளவு குறைந்த விலைகளை நாம் பேணுவதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் 8மில்லியனுக்கும் அதிகமான வாடிக்கையாளர்கள் இலங்கை சதொச விற்பனை நிலையங்களை நாடி ஆதரவளிக்கிறார்கள். வருமானத்தை ஈட்டுவதல்லாமல் பொது மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதே எமது பிரதான நோக்கமாகும். அதாவது மக்களின் வாழ்ச்கைச் செலவைக் குறைப்பதேயாகும். சுதொச நிறுவனம் உங்களுடைய நிறுவனம். நிறுவனத்தின் ஊழியர்கள் மட்டுமன்றி, பொது மக்களுக்கும் இந்த நிறுவனத்தை பாதுகாக்கும் கடமையுண்டு.
2017 ஆம் ஆண்டின் முடிவில், நாடு முழுவதிலும் பரந்தளவில் சதொச விற்பனை நிலையங்களின் தொகையை 400 ஆக அதிகரிக்க முடிந்தது. இவ்வருட முடிவில் மேலும் 100 சதொச விற்பனை நிலையங்களை திறக்க முடியுமாயிருக்கும். இவ்விற்பனை நிலையங்கள் நகரங்களுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாமல் கிராமங்களிலும் திறக்கப்படும்.

அநேகமான சுப்பர் மார்க்கெட் நிறுவனங்கள் “மெகா” திட்டத்தின் கீழ் இயங்குகின்றன. நாம் மெகா திட்டத்தை வித்தியாசமான முறையில் அறிமுகம் செய்யவுள்ளோம். மெகா திட்டத்தை மிகவும் குறைந்த விலையில் அறிமுகப்படுத்தவுள்ளோம். தற்போது இத்திட்டம் வெலிசறையில் மட்டும் நடைமுறையிலுள்ளது. இத்திட்டத்தை வெகுவிரைவில் நாடு முழுவதும் எல்லா சதொச விற்பனை நிலையங்களுக்கும் அபிவிருத்தி செய்யவுள்ளோம். 60 இற்கும் மேற்பட்ட பொருட்கள் தற்போது குறைந்த விலையில் வழங்கப்படுகின்றன.

லங்கா சதொச ஒரு பெரிய நிறுவனமாகும். அத்துடன் இந்நிறுவனம் கணனிமயப்படுத்தப்பட்டதுடன் மின்சார சிட்டை, தொலைபேசி சிட்டை போன்ற நுகர்வோர் பயன்பாட்டு சிட்டைகளையும் சதொச நிறுவனங்களில் செலுத்தமுடியும். வெகு விரைவில் நாங்கள் டுழுலுயுடுஐவுலு ஊயுசுனுளு வழங்கவுள்ளோம்.

எங்கள் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழி நடத்தலின் கீழ் சதொச நிறுவனமானது இன்று அபரிதமான விபரிக்கமுடியாத முன்னுதாரணமற்ற வெற்றியடைந்துள்ளது. எங்கள் அமைச்சரின் தொடர்ச்சியான ஆலோசனைகளுடனும் வழிநடத்தல்களுடனும் இவ்வருடத்தில் எங்கள் உயர் இலக்குகளை அடையமுடியுமென மிகவும் திடமாக நம்புகின்றோம்.

Related Post