Breaking
Fri. Dec 27th, 2024

நாட்டில் யுத்தம் முடிவுற்று 6 வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் புதிய ஆட்சியின் நோக்கத்தின் அடிப்படையில் அபிவிருத்தியும் நல்லிணக்க முயற்சியும் சரிநிகராக பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டில் மீண்டும் யுத்தம் ஏற்படவும் தீவிரவாதிகள் தலைதூக்கவும் இடமளிக்கப்படாது என்றும் தேசிய பாதுகாப்புக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட்டு வருவதாகவும் முப்படையினரும் பாதுகாப்பு சபையில் வழங்கப்படும் ஆலோசனைக்கு அமைய திரம்பட செயற்படுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

நாட்டில் உள்ள சில அடிப்படைவாத பிரிவுகள் முன்வைக்கும் போலிக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் சேறு பூசல்களை நம்ப வேண்டாம் என்று அவர்களின் நோக்கம் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டில் நல்லிணக்க முயற்சிகளை முதன்மையாகக் கொண்டு புதிய அரசாங்கம் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தத்தை இல்லாதொழித்து சமாதானத்தை ஏற்படுத்திய இராணுவ வீரர்கள் என்றும் மறக்கப்பட மாட்டார்கள் என்றும் அவர்களுக்கு உரிய மரியாதை, கௌரவம் அளிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

Related Post