ஒட்டுப்பசை பொலித்தீன் (செலோடேப்) மூலமாக சீகிரிய ஓவியங்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
சீகிரிய ஓவியங்களை பாதுகாக்கும் நோக்கில் தேவையான கலவைகளைப் பூசி அதன் மீது ஒட்டுப்பசை பொலித்தீன் கொண்டு சிலநாட்கள் வரை மூடி வைக்கப்பட்டிருந்தது.
இதன் பின்னர் ஒட்டுப்பசை பொலித்தீன் அகற்றப்படும்போது முன்பிருந்ததை விட சீகிரிய ஓவியங்களுக்கு சேதம் விளைந்துள்ளது.
தற்போது தொல்பொருள் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிதியம் என்பன இரண்டு அமைச்சர்களிடம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்டுள்ள மோதல் காரணமாக சீகிரிய ஓவியங்கள் சேதம் குறித்த சம்பவம் தற்போது பெரிதுபடுத்தப்பட்டுள்ளது.