Breaking
Fri. Nov 22nd, 2024
சீனாவில் சிறுபான்மையினர் அதிகமாக வசிக்கும் ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
வடமேற்கு சீனாவில் அமைந்துள்ள தன்னாட்சி பிரதேசம் ஜின்ஜியாங். இந்த பகுதியில் 10 மில்லியனுக்கு அதிகமான உய்குர் முஸ்லீம் சிறுபான்மையினர் வசிக்கிறார்கள். சீனாவில் ஆட்சியில் இருக்கும் கம்யூனிஸ்ட் கட்சி நாத்திக கொள்கைகளை பின்பற்றுவதால்.
இன்று முதல் சீனாவில் நோன்பு கடைப்பிடிக்கப்படும் நிலையில், ஜின்ஜியாங் மாகாணத்தில் ரம்ஜான் நோன்புக்கு கடைப்பிடிப்பதற்கு புதிய கட்டுப்பாடுகளை அரசு விதித்துள்ளது. இது குறித்து அரசாங்கம் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் “ கட்சி உறுப்பினர்கள், அங்கத்தவர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் சிறார்கள் ரம்ஜான் நோன்பு கடைப்பிடிக்க கூடாது மற்றும் மத நடவடிக்கைகளில் பங்கேற்க கூடாது.
இந்த மாதத்தில் உணவு மற்றும் மதுபான கடைகள் திறந்தே இருக்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

By

Related Post