Breaking
Fri. Nov 22nd, 2024

உலகிலேயே நீளமான கண்ணாடி பாலம் சீனாவில் உள்ள ஹுனான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. 2 மலைகளுக்கு இடையே 300 மீட்டர் உயரத்தில் இந்த பாலம் கட்டப்பட்டுள்ளது.

2 மலைகளிலும் தூண்கள் அமைக்கப்பட்டு அதை இரும்பு கம்பியால் ஒன்றாக இணைத்து பாலத்தை உருவாக்கி உள்ளனர். அதன் நடுப்பகுதியில் முழுக்க முழுக்க கண்ணாடிகள் பொறுத்தப்பட்டுள்ளன.

அந்த கண்ணாடியில் நடந்து சென்றால் கீழே உள்ள காட்சிகள் நன்றாக தெரியும். அந்த கண்ணாடி உடைந்து விடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தும். ஆனாலும், அது உடைந்து விடாதபடி வலுவாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த பாலத்தின் மொத்த நீளம் 430 மீட்டர். 6 மீட்டர் அகலத்தில் பாலம் இருக்கிறது. இதன் பணிகள் கடந்த டிசம்பர் மாதமே முடிந்து விட்டன. இந்த வாரத்தில் பாலம் பொதுமக்கள் நடந்து செல்ல திறந்து விடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் 8 ஆயிரம் பேர் மட்டும் பாலத்தில் நடந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இதற்கு ஒரு நாள் முன் கூட்டியே உரிய அனுமதி பெற வேண்டும்.

சமீபத்தில் இந்த பாலத்தில் 2 டன் எடை கொண்ட மின் லாரி ஒன்றை இயக்கி சோதனை செய்யப்பட்டது. அவ்வளவு எடையையும் அந்த பாலம் தாங்கியது குறிப்பிடத்தக்கது.

By

Related Post