மத்திய சீனாவின் ஹெனான் மாகாணத்தில் பிங்டிங் ஷான் நகரில் முதியோர் இல்லம் உள்ளது. அங்கு 100–க்கும் மேற்பட்ட முதியவர்கள் தங்கியுள்ளனர்.
இந்த நிலையில் அங்கு இரவில் திடீரென தீ பிடித்தது. பின்னர் படிப்படியாக முதியோர் இல்லத்தின் பல பகுதிகளுக்கும் பரவியது. தகவல் அறிந்ததும் போலீசாரும், தீயணைப்பு படையினரும் அங்கு விரைந்து சென்றனர்.
தீயணைப்பு வீரர்கள் சுமார் 6 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இச்சம்பவத்தில் 38 பேர் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
அவர்களில் 2 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இந்த தீ விபத்துக்கு மின் கசிவு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.