சீனாவிலேயே முஸ்லிம்கள் அதிகமாக வாழும் சின்ஜியாங் மாகாணத்தில் ரமழான் நோன்பு பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பள்ளிகள், அரசு அலுவலகங்கள், மற்றும் இணைய தளங்களில் அறிக்கை ஒன்றை சின்ஜியாங் மாகாண நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதில் அரசு ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் நோன்பு மற்றும் பிற மத நடவடிக்கைகளில் பங்கேற்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
சின்ஜியாங் மாகாணத்தின் உள்ளூர் நிர்வாகம் அரசு ஊழியர்களின் உடல்நலம் பாதிக்கப்படும் என்ற காரணத்தைக் கூறி ஏற்கனவே இஸ்லாமிய மக்களை ரமழான் நோன்பிலிருந்து விலகி இருக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏற்கனவே, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளில் சீனாவின் கம்யூனிஸ்டு கட்சியும் சின்ஜியாங் அரசு நிர்வாகமும் மார்க்க நிகழ்ச்சிகளை தடை செய்வதாகக் கூறப்படுகின்றது.