அண்மையில் பீஜிங் நகரில் நடைபெற்ற 6 ஆவது சியாங்ஷன் பேரவை (Xiangshan Forum – 2015′) நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி கலந்து கொண்டார்.
இந்நிகழ்வானது சீன இராணுவ விஞ்ஞானம் சங்கம், மற்றும் சர்வதேச மூலோபாய ஆய்வுகளுக்கான சீன நிறுவனம் என்பனவற்றின் இணை அணுசரனையுடன் ஒக்டோபர் 16 ஆம் திகதி தொடக்கம் ஒக்டோபர் 18 ஆம் திகதி வரை இடம் பெற்றது.
நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர், சீன மக்கள் விடுதலை இராணுவத்தின் துணை இராணுவ பிரதம அதிகாரி அட்மிரல் சுன் ஜியாங்கியூவோவை சந்தித்து இரு நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு விடயங்களில் ஒத்துழைப்புக்களை வலுப்படுத்தல் தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் பற்றியும் கலந்துரையாடினார்.
பயிற்சி, பாதுகாப்பு பிரதிநிதிகள் பரிமாற்றம், கூட்டு இராணுவ பயிற்சிகள், பயிற்சி நெறிகள், கருத்தரங்குகள், பயிற்சிப் பட்டறைகள் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான 2 ஆவது பாதுகாப்பு ஒத்துழைப்பு கலந்துரையாடல் 2016 ஆம் ஆண்டின் ஆரம்பப் பகுதியில் இலங்கையில் நடாத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டன.
அத்துடன் பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்பான கலந்துரையாடல் 2014 ஆம் ஆண்டு பீஜிங் நகரில் ஆரம்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. பொது அதிகாரிகளினது துணைத் தலைவர் நிகழ்வின் போது பாதுகாப்புச் செயலாளர் அவர்களை சீனாவுக்கான உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுத்தார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஆசிய பசிபிக் கடலோரப் பாதுகாப்பு, அபாயங்கள் மற்றும் முகாமைத்துவம் எனும் தொனிப் பொருளில் உரையாற்றினார்.
நாடுகளின் முழு பாதுகாப்பில் கடலோரப் பாதுகாப்பு முக்கியத்துவம் பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை போன்ற சிறிய தீவு நாடுகள் தனது அபிவிருத்திக்காக கடல்களிலேயே தங்கியுள்ளதாகவும் அப்பிரதேசங்கள் தற்போது சவால் மிகுந்ததாகவும் அதிக வகை கூறலுக்கும் உடைய பகுதிகளாக மாற்றமடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கடற்பரப்புக்களின் பாதுகாப்பு மற்றும் கடல் வழி பாதைகளினூடாக தொடர்பாடல் என்பவற்றை உறுதி செய்ய ஒத்துழைப்புடன் கூடிய படிமுறைகளை அபிவிருத்தி செய்ய வேண்டும் எனவும் கடல் மார்க்க வர்த்தகத்தில் அவைகள் முக்கியத்துவம் பெறுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சியாங்ஷன் பேரவையானது, 2006 ஆம் ஆண்டு, சீன இராணுவ விஞ்ஞான சங்கத்தினால் பாதுகாப்பு தொடர்புடைய கலந்துரையாடலுக்காக நிறுவப்பட்ட ஒரு தளம் என்பதுடன் அது ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஊக்குவிக்க அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றது.
5 ஆவது சியாங்ஷன் பசிபிக் 2014 ஆம் ஆண்டிலிருந்து இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மரபிலிருந்து மாற்றமடைந்து வருடாந்தம் நடாத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.