Breaking
Sun. Dec 22nd, 2024

சீன வர்த்தக அமைச்சின் ஆசிய விவகாரங்களுக்கான தினைக்களத்தின் பணிப்பாளர் யங் வியுகுன் தலைமையிலான சீன அரசாங்கத்தின் உயர் மட்ட குழு இன்று இலங்கை வருகின்றது.

இன்று இலங்கையில் ஆரம்பமாகவுள்ள பொருளாதார மாநாட்டில் கலந்து கொள்ளும் இந்த குழு ஹம்பந்தொட்டை துறைமுகம், கொழும்பு- கண்டி அதிவேக வீதி மற்றும் போர்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் தொடர்பிலும் ஆராயவுள்ளது.

இலங்கையில் கடந்த அரசாங்கத்தினால் சீன நிதி உதவியுடன் முன்னெடுக்கப்பட்ட பல பாரிய திட்டங்கள் புதிய அரசாங்கத்தின் கீழ் ஸ்தம்பிதம் அடைந்துள்ள நிலையில் இவை தொடர்பில் கூடுதல் முக்கியத்தும் அளித்து சீன குழு இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளது.

இதே வேளை, நல்லாட்சி அரசாங்கத்துடன் நெருங்கி செயற்படுவது தொடர்பிலும் அரச உயர் மட்ட தரப்புகளின் சந்திப்புகளின்போது சீன குழு கலந்துரையாட உள்ளது. குறிப்பாக ஹம்பந்தொட்டை துறைமுகம் மற்றும் போர்ட் சிட்டி ஆகிய திட்டங்கள் தொடர்பில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சீனாவின் விஷேட தூதுக்குழு கூடுதல் அவதானம் செலுத்தவுள்ளது.

எதிர் காலத்தில் தொடர்ந்தும் இலங்கையுடன் வலுவான அனைத்து துறைசார் உறவுகளை முன்னெடுக்கும் நோக்கில் புதிய முதலீடுகள் தொடர்பிலும் இதன் போது சீன குழு கலந்துரையாட உள்ளது.

By

Related Post