இரண்டு நாள் விஜயத்தை மேற்கொண்டு சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங் செப்டெம்பர் மாதம் 16ஆம் திகதி இலங்கை வருகைதரவுள்ளார்.
சீன ஜனாதிபதியொருவர் முப்பது வருடங்களுக்கு பிறகு இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அரசியல் பிரமுகர்களை அவர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவதுடன் நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது கட்டத்தையும் ஆரம்பித்துவைப்பார் என்று தெரிவிக்கப்படுகின்றது.