சீனா தனது நாணயமான யுவானின் அமெரிக்க டாலருக்கு நிகரான மதிப்பை 2 சதவீதம் அளவுக்குக் குறைத்துள்ளது.கடந்த மூன்று வருடங்களில் யுவானின் மதிப்பு இந்த அளவுக்கு கீழே சென்றிருப்பது இதுவே முதல்முறையாகும்.
இம்மாதிரியான திருத்தம், தொடர்ச்சியாக செய்யப்படாது என்றும் ஒரு முறை மாத்திரமே செய்யப்படும் என்று சீன மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
ஜூலை மாதத்தில், சீனாவின் ஏற்றுமதி கடும் வீழ்ச்சியைச் சந்தித்திருக்கும் நிலையில், சீன மத்திய வங்கியின் இந்த நடவடிக்கை ஏற்றுமதியை மேம்படுத்த உதவும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.சீன நிறுவனங்களை வெளிநாடுகளில் முதலீடு செய்வதை ஊக்குவிக்கும் வகையில், யுவானின் மதிப்பை வீழ்ச்சியடையாமல் வைத்திருக்கும் கொள்கையை சீனா வைத்திருக்கிறது.