Breaking
Mon. Dec 23rd, 2024

சீமெந்துக்காக அதிகரிக்கப்பட்ட புதிய விலையானது, புதிய கையிருப்புகளுக்கு மாத்திரமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஜூன் முதலாம் திகதி முதலான கையிருப்புகளுக்கு மாத்திரம் 930 ரூபாய் விலையினைச் செலுத்துமாறு, நுகர்வோர் அதிகார சபை, பொதுமக்களைக் கேட்டுள்ளது.

50 கிலோகிராம் நிறையுடைய சீமெந்து மூடையொன்றின் விலை, 60 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இதுவரை காலமும் 870 ரூபாய்க்கு காணப்பட்ட சீமெந்து மூடையொன்று, 930 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து நிறுவனங்கள் பலவற்றின் வேண்டுகோளுக்கு இனங்கவே, சீமெந்தின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதென அதிகாரசபை மேலும் கூறியது.

By

Related Post