நாடாளவிய ரீதியில் சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களுக்கு உடனடி மனிதாபிமான நிவாரண உதவிகளை வழங்குவதற்கு அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளும் முன்வந்துள்ளன.
ஏற்கனவே ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகள் தமது நிவாரணப் பொருட்களை கப்பல்கள் மற்றும் விமானங்கள் ஊடாக இன்று நாட்டுக்கு அப்பிவைத்தமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்கா 50ஆயிரம் டொலர் நிதியை வழங்குதற்கு முன்வந்துள்ளது.
அதேநேரம் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தேவையான உதவிகளை வழங்குவதற்கு தயாராகவுள்ளதாக அறிவித்துள்ளன.