Breaking
Mon. Dec 23rd, 2024

நிலவும் சீரற்ற காலநிலை கார­ண­மாக நாட­ளா­விய ரீதியில் மக்­களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்ள நிலையில் ஏற்­பட்ட அனர்த்­தங்­களில் சிக்கி 6 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். அத்­துடன் மேலும் 9 பேர் காய­ம­டைந்­துள்­ள­துடன் நான்கு பேர் காணாமல் போயுள்­ளனர்.

இத­னை­விட சீரற்ற கால­நிலை கார­ண­மாக 25, 820 குடும்­பங்­களைச் சேர்ந்த 88 933பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர். 65 வீடுகள் முற்­றா­கவும் 1240 வீடுகள் பகு­தி­ய­ள­விலும் சேத­ம­டைந்­துள்­ள­தாக அனர்த்த முகா­மைத்­துவ மத்­திய நிலையம் தெரி­வித்­துள்­ளது.

மேலும் பாதிக்­கப்­பட்­டோரில் 8445 குடும்­பங்­களைச் சேர்ந்த 31, 851 பேரை 106 முகாம்­களில் தங்­க­வைத்­துள்­ள­தாக அந்த நிலையம் அறி­வித்­துள்­ளது.

By

Related Post