Breaking
Mon. Dec 23rd, 2024

– அஸ்ரப் ஏ சமத் –

நூல் வெளியீட்டு விழா ஜூன் 6 கொழும்பில்

தினகரன் வாரமஞ்சரி இணை ஆசிரியர் சுஐப் எம். காசிம் எழுதிய ஷவடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள்| நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் மாதம் 6ம் திகதி சனிக்கிழமை (06.06.2015) மாலை 4.00 மணிக்கு கொழும்பு 10, டி. ஆர். விஜயவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் தலைமையக கேட்போர் கூடத்தில் நடைபெறும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ராஜித சேனாரட்ன பங்கேற்கின்றார். விசே;ட விருந்தினர்களாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீன், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் எம். ஏ. சுமந்திரன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் எம்.பி. ஆகியோர் பங்கேற்கின்றனர்.

ஜனாதிபதி சட்டத்தரணியும் இலங்கை தொலைத்தொடர்பு ஆணைக் குழுவின் பணிப்பாளர் நாயகமுமான எம். எம். ஸூஹைர், இலங்கைத் தரக்கட்டளை நிறுவனத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழக அரசியல் விஞ்ஞான பீட சிரேஷ்ட விரிவுரையாளருமான கலாநிதி எம். எஸ். அனீஸ் ஆகியோர் இவ்விழாவில் சிறப்புரையாற்றுவர். ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என். எம். அமீனின் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் சிறப்பு விருந்தினர்களாக தினகரன் வாரமஞ்சரி பிரதம ஆசிரியர் தே. செந்தில் வேலவர், தினகரன் நாளிதழ் பதில் ஆசிரியர் க. குணராசா, வீரகேசரி நாளிதழ் பிரதம ஆசிரியர் ஸ்ரீகஜன், தினக்குரல் வார இதழ் பிரதம ஆசிரியர் பாரதி இராஜநாயகம், ரூபவாஹினி கூட்டுத்தாபன தமிழ்ப் பிரிவு பிரதிப் பணிப்பாளர் யூ. எல். யாகூப், சுடர்ஒளி பிரதம ஆசிரியர் என். பத்மசீலன் ஆகியோர் பங்கேற்கின்றனர். புரவலர் ஹாசிம் உமர் முன்னிலையில் நடைபெறும் இவ்விழாவில் நூலின் முதல் பிரதியை முசலிப் பிரதேச சபைத் தலைவர் தேசமானிய டபிள்யூ. எம். எஹ்யான் பெற்றுக் கொள்கிறார்.

நூலின் முதன்மைப் பிரதிகளை தேசமான்ய அல்ஹாஜ் ஏ. பி. அப்துல் கையூம், தேசமான்ய மனித நேயன் இர்ஷாத் ஏ. காதர், தொழில் அதிபர் ஸப்ரி, புரவலர் பாயிக் மக்கீன், பொன்மனச் செல்வி கௌசலாதேவி. கவிஞர் டாக்டர் தாஸிம் அஹமட் ஆகியோர் பெற்றுக் கொள்கின்றனர்.
வரவேற்புரையை சமூக ஜோதி ரபீக்கும், நூலாசிரியர் அறிமுகத்தை கலைஞர் கலைச் செல்வனும், பாராட்டுரையை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம். ஏ. நிலாமும், கருத்துரையை ஊடகவியலாளர் ஏ. ஜி. எம். தௌபீக்கும் நிகழ்த்துகின்றனர். சிரேஷ்ட ஒலிப்பாளரும் சட்டத்தரணியுமான இஸ்மாயில் பி. மஆரீப் நிகழ்ச்சிகளை வழங்குகிறார்.

Related Post