Breaking
Mon. Dec 23rd, 2024

இந்திய கடற்படைக்குச் சொந்தமான மூன்று கப்பல்கள் பயிற்சி சுற்றுலாப் பயணமாக கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த 3 கப்பல்களும் இன்று வெள்ளிக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்ததாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இந்திய கடற்படைக்கு சொந்தமான 3 கப்பல்களையும் இலங்கை கடற்படையினர் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றுள்ளனர்.

இந்திய கடற்படைக்கு சொந்தமான சுஜாதா, டீர் மற்றும் இந்திய கடலோர காவற்படையினருக்கு சொந்தமான வருண ஆகிய 3 கப்பல்களு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.

இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டு கடற்படை பயிற்சியின் பின்னர்,  3 கப்பல்களும் எதிர்வரும் 19 ஆம் திகதி இலங்கையில் இருந்து புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

By

Related Post