Breaking
Fri. Nov 22nd, 2024

ஐரோப்பிய யூனியன் நாடுகள் கூட்டமைப்பில் இருந்து இங்கிலாந்து முழுமையாக வெளியேற முடிவு செய்துள்ளது. ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டுமா – வேண்டாமா என்பதை தீர்மானிப்பதற்காக அந்நாட்டு மக்களிடம் வரும் 23-ஆம் தேதி பொது வாக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

இதுதொடர்பாக, இங்கிலாந்தில் ஆளும் பழைமைவாத (கன்சர்வேட்டிவ்) கட்சியினரும், எதிர்க்கட்சியான தொழிலாளர் கட்சியை சேர்ந்தவர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர். ஐரோப்பிய யூனியனில் இங்கிலாந்து நீடிக்க வேண்டும் என்பது தொழிலாளர் கட்சியினரின் நிலைப்பாடாக உள்ளது. இந்நிலையில், ஐரோப்பிய யூனியனில் நீடிக்கவேண்டும் என்று குரல் கொடுத்துவந்த தொழிலாளர் கட்சியின் பெண் எம்.பி. ஜோ காக்ஸ் (வயது 41) தலைநகர் லண்டனில் ஆள்நடமாட்டம் மிகுந்த பகுதியில் பட்டப்பகலில் கத்தியால் குத்தப்பட்டும், துப்பாக்கியால் சுட்டப்பட்டும் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.

தனது தொகுதியான மேற்கு யார்க்‌ஷைரில் உள்ள பிரிஸ்டால் நகரில் ஜோ காக்ஸ் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த போது இருநபர்களுக்கு இடையே திடீர் மோதல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த சண்டையை ஜோ காக்ஸ் விலக்க முயன்றதாகத் தெரிகிறது.

அப்போது மோதலில் ஈடுபட்டவர்களில் ஒருவர் தனது கைத் துப்பாக்கியால் ஜோ காக்ஸை சரமாரியாக சுட்டுள்ளார். பின்னர், தன்னுடன் மோதலில் ஈடுபட்ட நபரையும் சுட்டுவிட்டு அவர் தப்பியோடினார். இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த ஜோ காக்ஸ் உள்ளிட்ட இருவரை போலீசார் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி ஜோ காக்ஸ் உயிரிழந்தார்

ஒரு பெண் எம்.பி. கொல்லப்பட்டிருப்பது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து முழுவதும் அசாதாரணச் சூழல் நிலவுகிறது. வாக்கெடுப்பு பிரச்சாரம் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஜோ காக்ஸ்-ன் மறைவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும். உயிரிழந்த ஜோ காக்ஸ்-ன் கணவரை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு ஆறுதல் கூறியதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. மேற்கு அமெரிக்காவில் உள்ள வனவிலங்கு காப்பகங்களை பார்வையிட தனது குடும்பத்தாருடன் சுற்றுப்பயணம் செய்துவரும் ஒபாமா, தனது ‘ஏர் போர்ஸ் ஒன்’ விமானத்தில் இருந்தவாறு ஜோ காக்ஸ்-ன் கணவரான பிரன்டன் காக்ஸை தொடர்பு கொண்டு பேசினார்.

ஜோ காக்ஸ்-ன் மறைவுக்கு அமெரிக்க மக்களின் சார்பில் இரங்கல் தெரிவித்து கொள்வதாக அப்போது ஒபாமா குறிப்பிட்டார் என அதிபரின் வெள்ளை மாளிகை இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

By

Related Post