Breaking
Sun. Dec 22nd, 2024
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாட்டில் பங்கேற்குமாறு விடுக்கப்பட்ட அழைப்பை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஏற்றுக்கொண்டுள்ளார்.
மிரிஹானையிலுள்ள மஹிந்த ராஜபக்சவின் வீட்டிற்கு சென்று, கட்சியின் மூத்த உப தலைவரும் தொழில் அமைச்சருமான ஜோன் செனவிரத்ன இந்த அழைப்பிதழை கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது மாநாடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 4 ஆம் திகதி குருநாகலில் நடைபெறவுள்ளது.
இதேவேளை இந்த மாநாட்டில் பங்கேற்க முடியும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கடந்த நான்காம் திகதி கூடிய போது, கட்சியின் மாநாட்டிற்கு முன்னாள் ஜனாதிபதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தியிருந்தார்

By

Related Post