கலவரமடையாதீர்கள். இம்முறை உங்களுக்கு சுதந்திரக் கட்சியில் சீட் கிடையாது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பந்துல குணவர்தனவை பார்த்துக் கூறினார்.
பாராளுமன்றத்தில் இன்று 27.04.2015 திங்கட்கிழமை அமர்வின்போது 19 ஆவது திருத்தச்சட்ட மூலம் மீதான விவாதத்தில் ஊடக விவகாரம் தொடர்பில் சர்ச்சை எழுந்தபோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
இதன்போது முன்னாள் அமைச்சர்களான காமினி லொக்குகே மற்றும் மஹிந்தானந்த அளுத்கமகே ஆகிய இருவரும் அமைதியாக அமர்ந்துகொண்டனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதமர் கூறியதைக் கேட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சிரித்துக்கொண்டிருந்தார்.