சுதந்திரத்தை உறுதிப்படுத்த அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நேற்று (21) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
சமூகத்தினரிடையே பல்வேறுப்பட்ட கருத்துக்களை முன்வைக்கப்படலாம்.எனினும், சுதந்திரத்தை உறுதிப்படுத்தும் விடயத்தில் அனைவரும் ஒரே மனபாங்குடன் செயலாற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், பல வருடங்களாக நாட்டில் சுதந்திரம் இருக்கவில்லை.
யுத்தம் நிறைவு பெற்றவுடன் பாரிய ஒடுக்குமுறை ஆட்சி இடம்பெற்றது. அதனை அடுத்து ஊழல் மோசடிகள் இடம்பெற்றன.
ஊழல்கள் தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாட தற்போது வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.
கடந்த காலங்களில் அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஊழல் மற்றும் மோசடிகளை தடுப்பதற்காக இன மற்றும் மத வாதங்களை தோற்றுவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.