– ஷம்ஸ் பாஹிம் –
சுதந்திரக் கட்சியை உடைக்கும் பாவகாரியத்துக்கு ஜ.தே.க ஒருபோதும் துணைபோகாது என களுத்துறை மாவட்ட ஜ.தே.க பிரதி அமைச்சர் அஜித் பி பொரேரா தெரிவித்தார்.
ஆனால், நாட்டுக்கு எத்தகைய பாதிப்பு நிகழ்ந்தாலும் பரவாயில்லை கட்சியைத் துண்டாடியாவது தமக்கு எதிரான குற்றங்களை மறைக்க ஒரு தரப்பினர் முயல்வதாகவும் அவர் குறிப்பிட்டார். களுத்துறை பகுதியில் இடம் பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய அவர் சுதந்திரக்கட்சி பிளவு குறித்து கருத்துத் தெரிவித்தார்.
சுதந்திரக் கட்சி துண்டாடப்படுவது ஜனநாயக்திற்கு அச்சுறுத்தலாகும்.ஜனாதபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியுடன் இணைந்து நாம் செயற்பட்டு வருகிறோம்.நாட்டின் நலன் குறித்து சிந்தித்தே நாம் செயற்படுகிறோம். ஆனால் சிலர் நாட்டிற்கு என்ன நடந்தாலும் பரவாயில்லை கட்சியை உடைத்தாவது தம்மை காத்துக் கொள்ள முயல்கின்றனர்.
ஆனால் சுந்திரக் கட்சி துண்டாடப் படுவதால் நாட்டிற்கே பாதிப்பு ஏற்படும். எனவே சுதந்திரக் கட்சியை துண்டாடும் பாவகாரியத்தை ஜ.தே.கா மேற்கொள்ளாது. அதற்கு துணை போகவும் மாட்டாது என்றார்.