Breaking
Tue. Dec 24th, 2024

சுனாமியில் வீடிழந்த மக்கள், மறிச்சுக் கட்டியில் நிலம் இழந்த மக்கள் ,வடக்கில் இருப்பிடம் இழந்த மக்களுக்காக அவர்களது துயர் துடைக்க இவ்வாறு இவர்கள் ஒரு அவசரக் கூட்டம்   கூட்டப் பட்டிருக்குமானால் அவர்களது துயரங்கள் எப்போதோ துடைக்கப் பட்டிருக்கும்  என தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி இங்கு கூறிக் கொள்ள விரும்புகிறது . நமது கட்சி அரசியலில் களம் இறங்கியது மக்கள் துயர் துடைக்கவே அன்றி வேறில்லை

ஆனால் இப்போது நடை பெறுவது இதுதான்

அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் மீண்டுமொரு சுற்று அவசரப் பேச்சுவார்த்தை

அரசியலமைப்பின் சர்ச்சைக்குரிய உத்தேச 20ஆவது திருத்தம் தொடர்பில் சிறுபான்மையினக் கட்சிகளினதும், சிறிய கட்சிகளினதும் பிரதிநிதிகள் மீண்டுமொரு சுற்று அவசரப் பேச்சுவார்த்தையை சற்று முன்னர் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமையகம் தாரூஸ்ஸலாத்தில் நடாத்தியது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இம்முக்கிய கலந்துறையாடல் இடம்பெற்றது.

இம்முக்கிய கலந்துறையாடலில் அமைச்சர் ரிசாட் பதியுதீன், இராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹஸனலி, பாராளுமன்ற உறுப்பினர்களான பேராசிரியர் திஸ்ஸ வித்தாரன, டக்ளஸ் தேவானந்தா, விஜித ஹேரத், மேல் மாகாண சபை உறுப்பினர் மனோ கணேசன், ஆனந்த மானமடு, சரத் மனமேந்திர, குமரகுருபரன் ஆகியோர் உட்பட இன்னும் சிலர் கலந்து கொண்டு மிகவும் காட்டமான கருத்துக்களையும், விமர்சனங்களையும் தெரிவித்தனர்.

Related Post