ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்
வரவு செலவு திட்டம் 2015 பற்றி , இதை தேசிய ஜனநாயக மனித உரிமைகள் கட்சி ஸ்தாபகர் மொஹிடீன் வாவா அவர்கள் சாதாரண மக்களுக்கும் விளங்கும் மொழியில் இதை ஒரு சுனாமி வரவு செலவு திட்டம் என வர்ணிக்கிறார் .
சுனாமி அனர்த்தம் நீங்கள் எல்லோரும் அறிந்தது , அதாவது கடல் தன்னை உள்வாங்கி பின்னேர் சீறிப் பாயும் . இதே போல்தான் முதலில் உங்களுக்கு ஆனந்தமாக இருக்கும் , ஆனால் சிறிது காலத்துக்குள் உங்களை சுனாமி சீறி வருவது போல் உங்களை வறுமைக் கோட்டின் அடி மட்டம் வரை கொண்டு போய் விடும்.
இவ்வாறன வரவு செலவு திட்டத்தை கண் மூடித் தனமாக ஆதரிக்கும் அரசியல் வாதிகள் யாராய் இருப்பினும் அவர்கள் நிதிமுகைத்துவ நிர்வாகத்தில், உலக பொருளாதார போக்கின் அறிவு
சிறிது அளவும் அறிவு இல்லாதவர்கள் என்பது தான் உண்மை.
அது மட்டும் அல்ல ,இவ்வாறன அரசியல் வாதிகளை சுய நல வாதிகள் எனவும், மக்களின் வாழ் வாதாரம் பற்றிக் கவலை இல்லாதவர்கள் எனவும் வர்ணிக்கலாம்.
உதாரணதுக்கு ஓன்று, பெற்றோலின் விலை குறைப்பு ஒரு கண்துடைப்பு, உலக சந்தையில் பெற்றோலின் விலையானது மிகவும் குறைவு அடைந்துள்ளது , அதன் நிமித்தம் தான் பெற்றோலின் விலை குறைக்கப் பட்டுள்ளது. ஆனால் சாதாரண மக்களுக்கு இது புரிய வாய்ப்பில்லை .
மக்கள் மீதுதுள்ள வாழ்க்கை செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தால் அவர்களது அன்றாட , நாளானத பாவனைப் பொருக்கல் மீதுள்ள வரி குறைக்கப் பட்டிருக்க வேண்டும் , இது ஒரு சான் ஏற முலம் சறுக்கும் வரைவு செலவு திட்டம் என்றும் கூறலாம்.