-ஊடகப்பிரிவு-
மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் நடாத்தப்பட்ட சுய தொழில் பயிற்சிகளை நிறைவு செய்தவடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (27) காலை மன்னார் நகர சபை மண்டபத்தில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன் கலந்துகொண்டார்.
சர்வதேச தொழில் அமைப்பின் (ஐ.எல்.ஓ) நிதி உதவியுடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் அனுசரனையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினூடாக குறித்த தொழிற்பயிற்சிகள் வழங்கப்பட்டன.
இந்த நிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொழிற் பயிற்சிகளை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகளுக்கு சான்றிதழ் மற்றும் தொழில் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவைகள் மன்றத் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்விற்கு விருந்தினர்களாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் எம்.வை.எஸ்.தேசப்பிரிய, தொழிற்பயிற்சி திணைக்களத்தின் பணிப்பாளர் வெளிக்கன்ன, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டீ.எம். சிசர குமார, தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் தொழில் திணைக்கள அதிகாரிகள் மற்றும் தொழில் பயிற்சியை பூர்த்தி செய்த இளைஞர், யுவதிகள் என பலர் கலந்துகொண்டனர்.