– நூர் –
அகில இலங்கை மக்கள் காங்கிரசின் இளையோர் அணி உருவாக்கும் வேலைத்திட்டம் ஒன்று அண்மையில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தில் அமைப்பாளர் மௌலவி முஹம்மது சலீம் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் வரிப்பத்தான்சேனை பிரதேசத்தை பிரதிநிதித்துவபடுத்தும் ஏராளமான இளம் தலைமுறையினர் கலந்து கொண்டிருந்தனர்.
இந்த இளையோர் அணி அங்குராப்பன நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும்,கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளரும்,கட்சியின் கிழக்கு மாகாண அமைப்பாளருமான சிம்ஸ் பல்கலைகழக முதல்வர் பொறியலாளர் அன்வர் எம் முஸ்தபா எதிர்வரும் தலைமுறையினர் உடல் ,உள ரீதியாக எதிர்நோக்கி வரும் பிரச்சினைகளுக்கும் ,
சவால்களுக்கும் முகம் கொடுக்க பழகி வருவது பாராட்ட தக்க ஒன்றே என தெரிவித்தார்.மேலும் நமது மாவட்டத்தின் அபிவிருத்திகளை நாமே பெற்று கொள்ள முன்வர வேண்டும் எனவும் மக்களின் சார்பில் எங்கும்,யாருக்கும் அஞ்சாமல் பேசகூடிய உங்கள் பிரதிநிதிகளை நீங்களே பாராளுமன்றம்,மாகாண சபைகள்,உள்ளுராட்சி மன்றங்களுக்கு அனுப்ப முன்வர வேண்டும் எனவும் சுயநல அரசியல் செய்யும் கட்சிகளை மக்கள் அடையாளம் காண ஆரம்பித்துள்ளனர்.அவர்களை இந்த மண்ணிலிருந்து விரட்டியடிக்க மக்கள் தயாராக உள்ளதாகவும் சுற்றி காட்டினார்.
எமது மக்களை பேரின சக்திகளிடமிருந்து மீட்டு மக்கள் நலனில் அக்கறையுடன் மக்களுக்காக போராடும் தேசிய தலைவர் கௌரவ அமைச்சர் ரிசாத் அவர்களின் கரங்களை பலப்படுத்தி இளம் சக்தியின் வலிமையை இந்த தேசத்திற்கு காட்ட சகலரும் முன்வர வேண்டும் எனவும் அழைப்பு விடுத்தார்.
இந்த நிகழ்வில் அமைப்பாளர் மௌலவி சலீம்,மேலும் பலரும் உரையாற்றினர்.