Breaking
Tue. Mar 18th, 2025

இலங்கை போக்குவரத்து சபையில் பணி புரியும் 3400 ஊழியர்கள் சுயவிருப்பின் கீழ் ஓய்வு பெற விண்ணப்பித்துள்ளனர்.

இவர்களுக்கு ஓய்வு வழங்கும் நடவடிக்கை இரண்டு கட்டங்களின் கீழ் முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஸ்ட அதிகாரி தெரிவித்துள்ளார்.

முதற்கட்டமாக 1,077 பேருக்கு ஓய்வு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இவர்கள் பணியில் இருந்து விலகும் போது மொத்தமாக ரூபா 1.2 மில்லியனில் இருந்து ரூபா 3 மில்லியன் வரையில் அவர்களின் ஓய்வூதியத் தொகையும் நல்லெண்ணத்தொகையும் வழங்கப்படும் என சிரேஷ்ட அதிகாரி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் கருத்து தெரிவித்த போக்குவரத்து பிரதி அமைச்சர் அசோக் அபேசிங்க,

இந்த நடவடிக்கை ஒக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டு இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என அவர் தெரிவித்துள்ளார்.

By

Related Post