Breaking
Tue. Dec 24th, 2024

அஸ்ரப் ஏ சமத்

சுயாதீன தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டு 38 வருடங்களுக்குப் பிறகு முதன் முறையாக தொலைக்காட்சியின் தலைமையகத்தில் அங்கு கடமையாற்றும் 12 முஸ்லீம் ஊழியா்கள் சோ்ந்து பிரமான்ட முறையில் இப்தாா் நிகழ்வை நடாத்தினாா்.

இந் நிகழ்வு ஜ.ரீ.என். 7 மணி சிங்கள செய்தியில் நேரடி ஒலிபரப்பட்டது. இந் நிகழ்வுக்கு சுயாதீன தொலைக்காட்சி வசந்தம் தொலைக்காட்சியின் பணிப்பாளா்கள் பொதுமுகாமையாளா்கள் ஊடகவியலாளா்கள் அரச அதிகாரிகள் அழைக்கப்பட்டனா்.

இந் நிகழ்வுக்கு மொலவி தாசீம் அனுசரனை வழங்கியிருந்தாா். அமைச்சா் ஏ.எச்.எம் பௌசி, அசாத்  சாலி மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம் அஸ்வா்  ஆகியோர் கலந்து கொண்டாா்கள்.

இனி வரும் காலத்தில் ஒவ்வொரு வருடமும் இப்தாா் நிகழ்வை தொடா்வதாக அங்கு கடமையாற்றும் முஸ்லீம் ஊழியா்கள் தெரிவித்தனா். தற்போதைய தலைவா் செய்திப் பிரதி முகாமையாளா் உங்களது மத நிகழ்வுகளை செய்வதற்கு சகல உரிமைகளும் உண்டு. அதனை செயல்படுத்தும் படி அனுமதி வழங்கியுள்ளனா். “

இந் நிகழ்வின் செய்திப்பிரிவு மொஹமட் இர்பான், சித்தீக் ஹனிபா, வசந்தம் தொலைக்காட்சி தயாரிப்பாளா் ஏ.எல்.இர்பான் ஆகியோரும் இந் நிகழ்வை செயல்படுத்தினாா்கள்.

Related Post